பினாங்கில் பொது ஊழியர்கள் சேவைக்கு அங்கீகாரம்

பட்டமளிப்பு விழாவில் விருது பெற்ற மாநகர் கழக பொது ஊழியர்கள்
பட்டமளிப்பு விழாவில் விருது பெற்ற மாநகர் கழக பொது ஊழியர்கள்

தூய்மை, பசுமை, மற்றும் பாதுகாப்பு மிக்க பினாங்கு மாநில உருவாக்கத்திற்கு ஆணிவேராகத் திகழும் பினாங்கு மாநகர் நகராண்மைக் கழக பொது ஊழியர்களுக்கு மாநில ஆளுநர் பிறந்தநாள் முன்னிட்டு பட்டம் வழங்கப்பட்டன. பொது ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் சமூக சேவைக்கான விருது ‘P.J.M’ மற்றும் ‘P.J.K’ வழங்கப்பட்டன. மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பட்டம் பெற்ற 8 மாநகர் பொது ஊழியர்களுக்கும் தமது சபாஷ் மற்றும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மாநில ஆளுநர் 78-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாநில முதல்வர் பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக பொது ஊழியங்கள் 3D எனும் சிரமம், ஆபத்து மற்றும் அசுத்தம் ஆகிய பணிகளில் தன்னை அற்பணித்துக் கொள்ளும் ஊழியர்களைப் பாராட்டினார்.
நம்பிக்கை கூட்டணி அரசு ஆட்சியில் பொறுப்புடன் திறன்மிக்க செயல்படும் பொது ஊழியர்களின் பங்களிப்பு அங்கீகரித்து பட்டம் வழங்குவது அவர்களின் சேவைக்குக் கிடைக்கும் சன்மானமாகத் திகழும் என ஶ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

திரு கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி

30 வருடமாக பொது ஊழியராக மாநகர் கழகத்தில் பணியாற்றும் திரு இராமநாதனுக்கு (PJM) பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். தனது வாழ்க்கை அனுபவத்தில் கடந்த மாதம் தெலுக் பஹாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி அதிகமான சேதத்திற்கு ஆளாகியது என்றார். இதனால் அன்றைய தினம் நள்ளிரவு மணி 2.00 வரை பொது ஊழியர்கள் வேரோடு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தல், சாலையைச் சுத்தம் செய்தல் மற்றும் கால்வாய்களில் அடைத்துக்கொண்டிருந்த குப்பைக்கூளங்கள் அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என்றார்.
2013-ஆம் ஆண்டு அம்னோ கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பம் விழுந்ததில் உயிர் சேதம் ஏற்பட்ட சம்பவத்தில் பொது ஊழியர்கள் மாநில அரசாங்க பொதுத் துறை அதிகாரிகளுக்கு அல்லும் பகலும் உழைத்து பிணம் தேடும் வேட்கையில் களம் இறங்கினோம் என தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் விருது பெற்ற திரு கோவிந்தசாமி.} else {