பினாங்கு ஆளுநர் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய சமூகச் சேவையாளர்கள் விருது பெற்றனர்

மாநில செயலாளர் டத்தோ பாரிசான் பின் டாருஸ், மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹாஜி அப்துல் ரஹ்மான் அபாஸ் , மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள் விருதளிப்பு விழா அணிவகுப்பைப் பார்வையிட்டனர்
மாநில செயலாளர் டத்தோ பாரிசான் பின் டாருஸ், மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹாஜி அப்துல் ரஹ்மான் அபாஸ் , மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள் விருதளிப்பு விழா அணிவகுப்பைப் பார்வையிட்டனர்

பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் அபாசின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய மாநில அளவிலான 1,223 பிரமுகர்களுக்கு 13/8/2016 தொடங்கி நான்கு நாட்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதான D.P.P.N எனும் விருது தேசிய மசூதி இமாம் தான் ஶ்ரீ டத்தோ ஷாய்க் ஹாஜி இஸ்மாயில் ஹஜி முகமது பெற்றார். இந்த உயரிய டத்தோஶ்ரீ விருது அவர் பினாங்கு மாநிலம் மட்டுமின்றி தேசிய அளவில் ஆற்றிய சேவைக்கு வழங்கிய அங்கீகாரமாகத் திகழ்கிறது.
D.M.P.N உயர் விருதினை ‘Ecoworld’ நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாகப் பணியாற்றும் டத்தோ சுந்திரராஜு சோமு பெற்றார். இவர் எஸ்.பி செத்தியா பெர்ஹாட் நிறுவன வடக்குப் பகுதி இயக்குனர், ‘Ecoworld’ வாரிய குழுத் தலைவர் மட்டுமின்றி பல அரசுசாரா இயக்கங்களில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ‘Ecoworld’ வாரிய குழுத் தலைவர் என்ற முறையில் 3,000 மாணவர்களை தொடக்கக் கல்வி முதல் உயர்க்கல்வி வரை கல்வி கற்க உதவியுள்ளார். அதுமட்டுமின்றி இந்து அறப்பணி வாரிய ஆணையாளராகவும் திகழ்கிறார்.
பிரபலத் தொழிலதிபரும், பெலித்தா உணவகங்களின் உரிமையாளர் மற்றும் லைட் நட்சத்திர தங்கும் விடுதியின் உரிமையாளருமான டத்தோ முருகன் துரைசாமிக்கு மாநில ஆளுநர் உயரிய டத்தோ விருதான D.M.P.N அளித்தார். தொடர்ந்து, பினாங்கு இந்தியர் வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.பார்த்திபனுக்கு டத்தோ விருது D.M.P.N வழங்கப்பட்டது. இவர் இந்து அறப்பணி வாரியத்தின் கீழ்ச் செயல்படும் பட்டவொர்த் மகா மாரியம்மன் ஆலயத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

டத்தோ சுந்தராஜு தமது துணைவியாருடன்
டத்தோ சுந்தராஜு தமது துணைவியாருடன்

2009 முதல் 2013 ஆண்டு வரை சீக்கியர் சங்கத் தலைவராகத் திகழ்ந்த பல்வின்டர் சிங் D.S.P.N விருது பெற்றார். மேலும் இவர் D.J.N, P.K.T, P.J.K ஆகிய விருதுகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஊனம் என்பது வாழ்வில் முன்னேற ஒரு தடைக்கல் அல்ல என நிரூபித்தார் ஆசிரியராக வாழ்வினைத் தொடங்கிய திரு துரைசாமி விடாமுயற்சியின் பலனாக லண்டனில் சட்டக் கல்வியைத் தொடர்ந்தார். பின்பு புகழ்ப்பெற்ற வழக்கறிஞராகவும் விரிவுரையாளராகவும் திகழ்ந்தார். கல்வி மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் உடல் ஊனமுற்றோர் சங்க சட்ட ஆலோசகராகவும் விளங்கினார்.

சன்வே புத்ரா தங்கும் விடுதியின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் திரு.நாகேஸ்வரனுக்கு பி.ஜே.கே பட்டம் வழங்கப்பட்டது. பினாங்கு வடகிழக்கு வட்டார கல்வி இலாகா அதிகாரியான திருமதி பிரேமா இராமையாவிற்கு P.J.K விருது வழங்கப்பட்டது. வியாபாரத் துறையில் வெற்றி நடைப்போடும் திரு சந்திரசேகர் அவர்களுக்கு P.K.T விருது வழங்கப்பட்டது