பினாங்கில் ‘LCCT’ அமைக்க ஏர் ஆசியா திட்டம்

Admin

ஜோர்ச்டவுன் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு புதிய Low-Cost Carrier Terminal ,LCCT” நிலையம் அமைக்க பினாங்கு மாநில அரசுடன் இணைய ஏர் ஆசியா குழு முன்வந்துள்ளது என பினாங்கு மாநில முதல்வர் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகையளித்த போது ஏர் ஆசியா பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி தான் ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின்போது, ர் ஆசியா பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி தான் ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் அவர்கள் ஏர் ஆசியா பினாங்கில் இருந்து 23 நாடுகளுக்கு நேரடி விமானம் வழங்க இணக்கம் கொண்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

எங்களுக்கு ஐந்து அனைத்துலக பாதைகளும் ஐந்து உள்நாட்டு பாதைகளும் உள்ளன. ஏர் ஆசியா உள்நாட்டு மற்றும் ஆசியான் இடங்களுடனான இணைப்புகளை அதிகரிக்க பினாங்கில் புதிய ‘LCCT’ அமைக்கப்படுவதன் மூலம் புதிய அனைத்துலக பாதைகளை அறிமுகப்படுத்தவும் முடியும்“, என மேலும் விவரித்தார் தான் ஶ்ரீ டோனி.

“LCCT உடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் விமானங்களை 5 முதல் 16 விமானங்கள் வரை அதிகரிக்க விரும்புகிறோம்; இதன் மூலம் பினாங்கில் ஓர் ஆண்டுக்குச் சுமார் எட்டு மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருகையளிப்பார்கள் என அவர் மேலும் மாநில முதல்வரிடம் விவரித்தார்.

இச்சந்திப்புக் கூட்டத்தின் போது, ஏர் ஆசியா ‘X’ பெர்ஹாட் குழு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஏர் ஆசியா நிர்வாகத் தலைவருமான டத்தோ கமாருடின் மெரானுன் கலந்து கொண்டார்.