பினாங்கு காற்றழுத்த பலூன் விழா

வண்ணமயமான காற்றழுத்த பலூன்
வண்ணமயமான காற்றழுத்த பலூன்

பினாங்கு காற்றழுத்த பலூன் விழா பாடாங் போலோவில் வருகின்ற 9 மற்றும் 10 பிப்ரவரி 2016 அன்று சீனப்பெருநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது ஆண்டாக மற்றொரு கோணத்தில் ஜார்ஜ்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் நடைபெறவுள்ளது. இதன் மினி கொண்டாட்டத்தை பீச் ஸ்திரிட் இடத்தில் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பினாங்கு காற்றழுத்த பலூன் விழா பினாங்கு மாநில அரசின் மானியத்தில் வருகையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க வாய்ப்புள்ளது.
அங்கு இரண்டு நாட்களுக்கு 15 அனைத்துலக காற்றழுத்த பலூன்களும் அனைத்து வயோதினரும் பாடாங் போலோவில் காலை மணி 7.00 முதல் இரவு மணி 9.30 வரை கலந்து கொள்ளலாம். காலை மணி 7.00-க்கு பலூன் தயார் நிலைப்படுத்தி 7.30 மணி அளவில் சுதந்திரமாக பறக்க விடுவர். யூத் பூங்காவிலிருந்து இந்த இரண்டு நாட்கள் காற்றழுத்த பலூன் பறக்கும் காட்சிகளை கண்டுகளிக்க அனைவரும் அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு நுழைவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மூன்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றழுத்த பலூன்களை கண்டு வியக்கலாம்.

காற்றழுத்த பலூன் வர்ணம் தீட்டும் பட்டறையில் கலந்து கொண்ட சிறுவர்கள்.
காற்றழுத்த பலூன் வர்ணம் தீட்டும் பட்டறையில் கலந்து கொண்ட சிறுவர்கள்.

இதனிடையே, இந்த காற்றழுத்த பலூன் விழா மினி கொண்டாட்டத்தில், குடும்ப நட்பு நடவடிக்கைகளான வேடிக்கை விளையாட்டுகள், படைப்புப் பட்டறைகள், காற்றழுத்த பலூன் வர்ணம் தீட்டும் போட்டி ஆகியவை பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இதில் அதிகமான சிறுவர்கள் பங்கேற்று அவர்களின் திறமைகளை வெளிகொணர்ந்தனர் என்பது வெள்ளிடைமலை. பினாங்கு மாநிலத்தில் வெப்பக் காற்றை உள்ளடக்கிய மாபெரும் வடிவமைப்பைக் கொண்ட காற்றழுத்த பலூன்கள் பாடாங் போலொவிலிருந்து வானில் மிதந்து கொண்ட ஜொர்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தை மற்றொரு கோணத்தில் காணப்படும். இப்பெரிய பலூன்களில் உலா வந்த பினாங்கு மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் வித்தியாசமான அனுபவத்தால் பரவசமடைவர் என எதிர்ப்பார்க்கபடுகிறது.