பினாங்கு கொடிமலை “Viewing Deck” திறப்பு விழாக் கண்டது

பினாங்கு மாநில அரசும் பினாங்கு கொடி மலை கழகமும் இணைந்து கொடிமலை “Viewing Deck” எனும் தளத்தை நிர்மாணித்துள்ளனர். இத்தளம் கொடி மலையிலிருந்து 750 மீட்டர் கடல் பரப்பு உயரத்தில் இருந்து பசுமையான காற்றை சுவாசித்து கொண்டு ஜொர்ஜ்டவுன் மற்றும் செபராங் பிறை இயற்கை எழில் அழகைக் கண்டு களிக்க “Viewing Deck” திறப்பு விழாக் கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள்.

பினாங்கு கொடிமலையின் "Viewing Deck" தளம்
பினாங்கு கொடிமலையின் “Viewing Deck” தளம்

“Viewing Deck” தளம் மூன்று வகையான வரிசை படிக்கட்டுகளுடன் அழகிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேம்பாட்டுத் திட்டம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இரண்டாம் கட்ட மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம9.05மில்லியன் செலவிடப்பட்டதாக நிகழ்வை துவக்கி வைத்து உரையாற்றிய மாநில முதல்வர் தெரிவித்தார். இம்மாதிரியான மேம்பாட்டுத் திட்டங்கள் வழி பினாங்கு மாநிலத்திற்கு மேலும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருகையளிப்பர் என்றார். சுற்றுப்பயணிகள் பினாங்கு இயற்கை அழகைக் கண்டு வியக்க இம்மேம்பாட்டுத் திட்டங்கள் ஏதுவாக அமையும் என்றார். கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு 1.45 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகைப்புரிவர் என நம்பப்படுகிறது. இதனிடையே, “Viewing Deck” தளத்திற்கு மாநில முதல்வர் “தே ஸ்காய் வாக்” (The Skywalk) எனும் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், மூன்றாம் கட்ட மேம்பாட்டுத் திட்டம் மின் தூக்கி பொருத்துதல், அருங்காட்சியகம், கேபே போன்ற வசதிகளுடன் அடுத்த மாதம் இறுதியில் நிறைவடையும் என நம்பப்படுகிறது.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);