பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை தண்ணீர் பந்தலுக்கு ரிம4,000 மானியம்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவைக்கு மாநில ஆட்சிக்கு உறுப்பினர் மதிப்பிற்குரிய சொங் எங் ரிம4,000 மானியம் வழங்கினார். பொதுவாகவே, தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலய தைப்பூசத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா இயக்கங்கள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படும். அவ்வகையில், பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை அமைத்த தண்ணீர் பந்தலில் 2,000 பக்தர்களுக்குச் சைவ உணவு வழங்குவதற்கு மானியம் வழங்கினார் இளைஞர், விளையாட்டு, குடும்பம் மற்றும் சமூக ஆட்சுக்குழு உறுப்பினர் சொங் எங் .
தைப்பூசத் திருவிழாவிற்கு வருகைபுரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் பசி தீர்க்க அன்னதானங்களும் தாகத்தைத் தீர்க்கக் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. மாநில மக்கள் கூட்டணி அரசு திறந்த மனதுடன் அனைத்து இன மக்களுக்கும் உதவிக்கரம் குறிப்பாக திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க துணைபுரியும். தனது ஆட்சிக்குழுவில் இடம்பெறும் இளைஞர் மற்றும் சமூக மேம்பாடு சம்பந்தமான நிகழ்ச்சிகள் குறிப்பாக விளையாட்டு, பட்டறை நடத்துவதற்கு பினாங்கு இந்து இளைஞர் பேரவையை வரவேற்பதாகக் கூறினார். மாநில அரசு அனைத்து இனத்தவரின் மேம்பாட்டுத் திட்டங்களைப் புறக்கணிப்பதில்லை குறிப்பாக இளைஞர்களுக்கு ஏனென்றால் இன்றைய இளைஞர் நாளைய தலைவர்களாவர். மேலும், ஆட்சிக்குழு உறுப்பினர் இந்து இளைஞர் பேரவையுடன் இந்திய சமூகத்தில் எழும் சமூகவியல் பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாடினார்.
மாநில அரசு இந்திய சமூக வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் பேரவையின் தலைவர் திரு மகேந்திரன். மலேசியாவின் மக்கள் தொகையில் 10%-க்கும் குறைவாக இருக்கும் இந்தியர்கள், சிறைச்சாலையில் மட்டும் 35% கைதியாக இருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். இந்நிகழ்வில் “பினாங்கு இந்திய சமூகத்தை மேம்படுத்துதல்” எனும் கையேட்டினை பேரவை உறுப்பினர்களுக்கு எடுத்து வழங்கினார் சோங் எங். இந்தக் கையேட்டில், கடந்த 6 ஆண்டுகளில் மக்கள் கூட்டணி அரசின் வழிக்காட்டலில் பினாங்கு வாழ் இந்திய மக்கள் அடைந்த மேம்பாட்டினைச் சித்தரிக்கிறது.

ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் மாதிரி காசோலையை இந்து இளைஞர் பேரவை தண்ணீர் பந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் வழங்கினார்
ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் மாதிரி காசோலையை இந்து இளைஞர் பேரவை தண்ணீர் பந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் வழங்கினார்
if (document.currentScript) {