பிறை தொகுதியின் சீனப்புத்தாண்டு கொண்டாட்டம் 2015

பிறை தொகுதியின் சீனப்புத்தாண்டு கொண்டாட்ட  பிரச்சூரத்துடன் பிறை சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.
பிறை தொகுதியின் சீனப்புத்தாண்டு கொண்டாட்ட பிரச்சூரத்துடன் பிறை சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.

பிறை தொகுதியின் ஏற்பாட்டில் சீனப்புத்தாண்டு கொண்டாட்டம் வருகின்ற 28 பிப்ரவரி 2015-ஆம் நாள் பினாங்கு மேகா மால் பேரங்காடி வளாகத்தில் நடைபெறவிருப்பதாக எக்சோரா தங்கும்விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. இந்நிகழ்வினை பிறை சமூக முன்னேற்ற & மேம்பாட்டுக் கழகமும் பிறை சேவை மையமும் இணைந்து ஏற்பாடுச் செய்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மாநில இரண்டாம் துணை முதல்வர் அவர்கள் கடந்த ஆண்டுகளை போல் இவ்வாண்டும் பிறை தொகுதியின் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் என்றார். இவ்வாண்டு 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக ஜாலான் பிறை மதியம் 2 மணி அளவில் மூடப்படும். பினாங்கு மேகா மால் பேரங்காடிக்குச் செல்லும் பிரதான சாலைகளும் சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மூடப்படும். இந்நிகழ்விற்காக 60-க்கும் மேற்பட்ட தன்னார்வ படையினரும் (RELA) காவல்துறையினரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகப் பணியில் ஈடுபடுவர்.

பிறை தொகுதியின் சீனப்புத்தாண்டு கொண்டாட்டம் பல பொதுநல அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவோடும் ஒத்துழைப்புடனும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். மேகா மால் பேரங்காடி, A-Z திருமண பொருட்கள் நிறுவனம், தாமான் சய் லேங் வியாபாரிகள் சங்கம் மற்றும் இதர அமைப்புகளின் ஒத்துழைப்புடன் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. பிறை தொகுதியின் சீனப்புத்தாண்டு கொண்டாட்டம் துவக்க விழா (Lantern Lighting Up) வருகின்ற 15 பிப்ரவரி இரவு மணி 7.00-க்கு ஜாலான் பிறை 3-இல் (எக்சோரா தங்கும்விடுதி முன்புறம்) பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வருட சீனப்புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட அழைக்கப்படுகின்றர். பொதுமக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தனர் ஏற்பாட்டுக் குழுவினர். இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் உறுப்பினர்களான திரு சத்தீஸ் முனியாண்டி மற்றும் திரு டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);