பினாங்கு மாநில ஶ்ரீ ஐயப்பன் சேவா சமாஜத்திற்கு ரிம10,000 நன்கொடை – திரு ஜெக்டிப்

கடந்த 30/8/2015-ஆம் நாள் ஶ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலயம் தொடக்கத்தில் பினாங்கு மாநில லெபோ நம்பியார் தெருவில் அமைந்தது. இடவசதியின்மைக் காரணத்தால் புதிய இடத்திற்கு இந்த ஆலயம் இடம் பெயர்க்கப்பட்டது என அதன் ஆலயத் தலைவர் திரு டவின்ரன் தெரிவித்தார். ஜாலான் ஶ்ரீ பஹாரி தெருவில் வீற்றிருக்கும் இந்தப் புதிய ஆலயத்திற்கு இடவசதி பெறுவதற்கு உதவிக்கரம் நீட்டிய டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு ஜெக்டிப் சிங் டியோ அவர்களுக்கு நன்றிக் கூறினர் ஆலய நிர்வாகத்தினர்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ ஆலய நிர்வாகத்தினரிடம் நன்கொடைக்கானக் காசோலை வழங்கினார்
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ ஆலய நிர்வாகத்தினரிடம் நன்கொடைக்கானக் காசோலை வழங்கினார்

ஆலய மகா கும்பாபிஷேகத்திற்குச் சிறப்பு வருகை மேற்கொண்ட ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் ஆலய வளர்ச்சிக்கு ரிம10,000 நன்கெடை வழங்கி சிறப்பித்தார். இந்த சேவா சமாஜம் ஆன்மீகம் மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் கல்விப் பிரார்த்தனை மற்றும் தீபாவளி பெருநாள் காலத்தில் ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்குவது அவர்களின் சேவை மான்பினைப் புலப்படுத்துகிறது என்றார்.
மலேசியாவிலே முதல் முறையாக பினாங்கு மாநிலத்தில் 6 அடி உயரம் கொண்ட பளிங்கு ஐயப்பன் சுவாமி விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 10 குருக்கல்கள் தலைமையில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் அலையெனத் திரண்டனர்.
2” Khazanah Research Institution” அறிக்கையின் படி அதிகமான மலிவு விலை வீடமைப்புத் திட்ட விண்ணப்பதாரர்களுக்கு வீட்டுக் கடனுதவி மறுக்கப்படுகிறது. இதனால் ஏழ்மை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மக்கள் சொந்த வீடுப் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்றார் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு ஜெக்டிப். இந்தப் பிரச்சனையைக் களையும் பொருட்டு வங்கி ஆளுநரான தான் ஶ்ரீ செத்தி அக்தார் அசிஸ் அவர்களைச் சந்திக்க மாநில முதல்வரும் தாமும் முற்படுவதாகக் குறிப்பிட்டார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);