பினாங்கு மாநிலத்தில் நகப்புற விவசாயத் திட்டம்

ஜாவி சட்டமன்ற உறுப்பினர், பைராம் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு ஜெகன்ஜிவீரம் (நடுவில்) மற்றும் பொது மக்கள் விவசாயத் திட்டத்தைத் தொடக்கி வைக்கின்றனர்
ஜாவி சட்டமன்ற உறுப்பினர், பைராம் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு ஜெகன்ஜிவீரம் (நடுவில்) மற்றும் பொது மக்கள் விவசாயத் திட்டத்தைத் தொடக்கி வைக்கின்றனர்

காய்கறிகள் நடுவதற்கு இரசாயணத் தன்மைக் கொண்ட பொலிபோம்(Polifoam) பயன்படுத்தாமல் வீட்டு அருகாமையில் அமைந்திருக்கும் நிலப்பரப்பில் அல்லது பூந்தொட்டிகளில் நடுமாறு வேண்டுகோள் விடுத்தார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ. பைராம் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற நகர்ப்புற விவசாயத் திட்டத்தைத் தொடக்கி வைத்த சூன் லிப் சீ இவ்வாறு குறிப்பிட்டார்.
இத்திட்டம் ஜாவி தொகுதியில் புக்கிட் பன்சூர் மற்றும் சங்லாங் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழகத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக இங்கு துவக்க விழாக் காண்கிறது என்றார். ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபிப் பாஹாருடின் தலைமையில் நகப்புற விவசாயத் திட்ட தலைவராக லிப் சூன் சீ நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு நகப்புற விவசாயத் திட்டமாவது செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இத்திட்டம் பொது மக்கள் சுயமாக காய்கறிகளைப் பயிரிடுவதற்கு வலியுறுத்துவதோடு அன்றாட சமையல் தேவைகளைப் பூர்த்திச் செய்யவும் பயன்படுத்தலாம் என்றார். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கரிம உரம்(baja organik) பயன்படுத்துவதோடு, இதன் மூலம் மறுசுழற்சி அமல்படுத்தப்படுகிறது என்றார்.

நகப்புற விவசாயத் திட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அரசு சாரா இயக்கங்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழகம் ஜாவி தொகுதி சேவை மையத்தை 04-5941163 தொடர்புக் கொள்ளவும்.