பினாங்கு மாநில “பிரிமா” வீடமைப்புத் திட்டம் எங்கே? திரு ஜெக்டிப்

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் 'New Sunday Times' எனும் நாளிதழ் விளம்பரத்தில் பினாங்கு மாநிலம் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் ‘New Sunday Times’ எனும் நாளிதழ் விளம்பரத்தில் பினாங்கு மாநிலம் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் நாடு தழுவிய நிலையில் கூட்டரசு அரசாங்கம் 13 ஒரே மலேசிய வீடமைப்புத் திட்டத்தில் (பிரிமா) பொது மக்கள் விண்ணப்பம் செய்யும் பொருட்டு ‘New Sunday Times’ நாளிதழில் விளம்பரம் அளித்துள்ளது. அந்த விளம்பரத்தில் பினாங்கு மாநிலத்தில் வீடமைப்புத் திட்டங்கள் இடம்பெறுவதாக அறிக்கவில்லை.
இந்த விளம்பரச் செய்தி தமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பதாகவும் கூட்டரசு அரசாங்கம் அரசியல் கொள்கை வேறுப்பாட்டினால் பொது மக்களுக்கு அனைத்து சலுகைகள் வழங்காமையும் குறிப்பிட்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் டியோ.
கடந்த ஆண்டு “The Star” நாளிதழில் வெளியிட்ட விளம்பரத்தில் பினாங்கு மாநில பலேக் புலாவ் மற்றும் குளுகோர் பகுதியில் பிரிமா வீடமைப்புத் திட்டம் இடம்பெறுவதாகவும் குறிப்பிடார். கடந்த ஆண்டு 25/11/2014-ஆம் நாள் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சஹீடான் காசிம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் பினாங்கு மாநில பலேக் புலாவ், தெலோக் கும்பார் மற்றும் குளுகோர் ஆகிய இடங்கள் பிரிமா வீடமைப்புத் திட்டத்திற்காக அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
மாநில அரசு கடந்த அக்டோபர் 2013-ஆம் ஆண்டு தொடங்கி 22 ஏப்ரல் 2015ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 10 அதிகாரப்பூர்வ கடிதங்கள் கூட்டரசு அரசாங்கத்திற்கு அனுப்பியதாகக் கூறினார். அதுமட்டுமின்றி மாநில முதல்வர் சார்பிலும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2012-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பிரிமா திட்டத்தில் இன்று வரை பினாங்கு மாநிலம் இடம்பெறாதது தமக்கு வருத்தளிப்பதாகக் கூறினார்.
மலேசியாவிலே வரி செலுத்துவதில் மூன்றாவது இடத்தில் திகழும் பினாங்கு மாநில மக்களுக்குக் கூட்டரசு அரசாங்கம் பிரிமா மலிவு விலை திட்டத்தை வழங்க முன்வரவில்லை என வினவினார். வங்கி மலிவு விலை வீடுகள் வாங்க முற்படுவோருக்கு வீடமைப்புக் கடனுதவி நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும், குறிப்பாக மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் வாங்குநருக்கு என்றார்.
வருகின்ற ஆகஸ்டு மாதம் நடைபெறவிருக்கும் அனைத்துலக சொத்துடைமை மாநாட்டில் மலிவு விலை வீடமைப்புக் கடனுதவி விவகாரம் பரிசீலனைச் செய்யப்படும் என்றார்.} else {