பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகநல இயக்கங்களின் தீபத் திருநாள் கொண்டாட்டம்.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் டத்தோ ஶ்ரீ அருணாசலம் ஏழை மக்களுக்குப் பரிசுக்கூடை வழங்கினர்.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் டத்தோ ஶ்ரீ அருணாசலம் ஏழை மக்களுக்குப் பரிசுக்கூடை வழங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை இனிதே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பல கொடை வள்ளல்கள் ஆண்டுத்தோறும் பல தொண்டுகள் வழங்கி வருகின்றனர். அவ்வகையில் பல ஆண்டுகளாகத் தொண்டுள்ளம் கொண்ட டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் அவர்களின் நற்பணிக்குழுவினரும் பட்டர்வொர்த் சமூகநலத்துறையும் இணைந்து 36 முறையாக ஏழை எளியோருக்கு பரிசுக்கூடை எடுத்து வழங்கினர். இந்த ஆண்டு ஏறக்குறைய 500 பல்லின ஏழை மக்களுக்கு பரிசுக்கூடை வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இந்நிகழ்வு ஶ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திருதனசேகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்களான லிம் ஹொக் செங் மற்றும் பீ புன் போ கலந்து கொண்டு சிறப்பித்தனர். டத்தோஶ்ரீ அருணாசலம் ஏற்று நடத்தும் இன வேற்றுமை பாராத பல சமூக நிகழ்வுகளைக் கண்டு அகம் மகிழ்வதாகக் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். அன்னாரின் சமூக தொண்டுள்ளம் மாநில அரசு தொடர்ந்து மூத்தக்குடி மக்கள், மாணவர் மற்றும் குடும்ப மாது போன்ற தங்கத் திட்டங்கள் செயல்முறை படுத்த ஊந்துகோளாகத் திகழ்கிறது என்றார்.

ஆதரவற்ற குழந்தைகளுடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி மற்றும் சன்வே குழுவின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு நாகஸ்வரன்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி மற்றும் சன்வே குழுவின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு நாகஸ்வரன்.

முதல் முறையாக சன்வே குழுவினர் தீபாவளி கொண்டாட்டத்தை 5 ஆதரவற்ற இல்ல குழந்தை மற்றும் முதியவர்களுடன் மிக விமரிசையாகக் கொண்டாடினர். இவ்விழாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தீபாவளி பணம், எழுதுகோள்கள் மற்றும் இந்திய பாரம்பரிய உணவு பதார்த்தங்களுடன் பரிமாறப்பட்டது. மேலும் முதியவர்கள் மற்றும் குழந்திகளுக்காக மாய வித்தை மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதன் முறையாக நடைபெற்ற விருந்தோம்பலில் முக்கிய பிரமுகராக மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்குப் பரிசு எடுத்து வழங்கினார். சன்வே குழுவின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு நாகஸ்வரன் அவர்களுக்கு தமது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்து கொண்டார். இந்நிகழ்வில் YWCA காப்பகம், ஶ்ரீ சாஹாயா சமூகநல மையம், செத் ஜோசப் காப்பகம், இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும், ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றமும் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் அவர்களும் இணைந்து தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்வு நடத்தினர். இந்நிகழ்வில் உடல்

தீபாவளி பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொண்ட பொது மக்களுடன் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.
தீபாவளி பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொண்ட பொது மக்களுடன் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.

ஊனமுற்றோர், தனித்து வாழும் தாய்மார், ஏழை எளியோர் என 105 பேர்களுக்கு ரிம100 மதிப்புக் கொண்ட பற்றுச்சீட்டு வழங்கப்பட்டன. இந்நிகழ்வு வெற்றிப்பெபுக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிம10,000 மானியம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நற்பணி கழகத்தின் தொண்டுள்ளத்தைப் பாராட்டிய ஸ்திவன் சிம் வருடாந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ள மேலும் ரிம3,000 மானியம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கினார்.

 

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் ஏழை மக்களுக்குப் பரிசுக் கூடை எடுத்து வழங்கினார்.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் ஏழை மக்களுக்குப் பரிசுக் கூடை எடுத்து வழங்கினார்.

2008-ஆம் ஆண்டு தொடங்கி பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் ஏற்பாட்டில் ஏழை மக்களுக்கு தீபாவளி பரிசுக்கூடை கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு 300 ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. பொது மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு மாநில அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல தங்கத் திட்டங்கள் மேற்கொள்வதாக அகம் மகிழ தெரிவித்தார்