பினாங்கு மாநில ஆளுநர் ஆறாவது முறையாக பதவி ஏற்றார்

கடந்த 28 ஏப்ரல் 2015-ஆம் நாள் பினாங்கு மாநில ஆளுநர் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் பின் ஹஜி அப்பாஸ் அவர்கள் ஆறாவது முறையாக அரியணை அமர்ந்தார். இந்நிகழ்வு அரச பாரம்பரிய முறைப்படி ஸ்ரீ முத்தியாராவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தமது துணைவியார் பேட்டி சியூ ஆகியோருடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

ஆறாவது முறையாக பினாங்கு ஆளுநராக பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் பின் ஹஜி அப்பாஸ் .
ஆறாவது முறையாக பினாங்கு ஆளுநராக பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் பின் ஹஜி அப்பாஸ் .

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் பினாங்கு மாநில அமைதி, சுபிட்சம், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவைகளுக்கு ஆளுநரின் தலைமைத்துவமே தக்க சான்று எனப் பாராட்டினார். இறைவனின் கிருபையால் பினாங்கு மாநிலம் மேலும் பல முன்னேற்றங்களை அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, பினாங்கு மாநில வரலாற்றில் 2008-2013-ஆம் ஆண்டு வரை பினாங்கு மாநில அரசு கூடுதல் வருமானத்தை தனது பொறுப்பு, ஆற்றல், வெளிப்படை கொள்கையின் வழி நிரூபித்துள்ளது. அதாவது இந்த ஆறு ஆண்டுகளில் ரிம 453 கோடி கூடுதல் வருமானத்தை இலஞ்ச ஊழல் இன்றி திறமையாக ஈன்றுள்ளதாகக் கூறினார். இந்த கூடுதல் வருமானத்தை கொண்டு பினாங்கு தங்கத் திட்டங்கள், மக்கள் பொதுநல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதோடு, செபராங் ஜெயாவில் ரிம 12 கோடி செலவில் பொது சந்தையை 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்க மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அண்மையில் திறப்பு விழாக் கண்ட செபராங் பிறை அரேனா விளையாட்டு அரங்கம் மாநில அரசின் சொந்த மானியத்தில் நிர்மாணிக்கப்பட்டது பாராட்டக்குறியதாகும்.

பினாங்கு மாநில ஆளுநர் ஆறாவது பதவி பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள்.
பினாங்கு மாநில ஆளுநர் ஆறாவது பதவி பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள்.

இதனிடையே, பினாங்கு மாநில சாலை நெரிசல் பிரச்சனையை களையும் பொருட்டு 2020-க்குள் நீர், நிலம், ஆகாயம் வழி என போக்குவரத்து திட்டங்களை மேம்படுத்தவுள்ளன. பினாங்கை அனைத்துலக நகரமாக உருமாற்றும் இலக்கை அடைய தேசிய ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் போன்றவையை முதன்மையாக திகழ்கிறது.}