பினாங்கு மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு 2015.

மாநில முதல்வர், இரண்டாம் துணை முதல்வர் மற்றும் சபா நாயகர் அதிகாரப்பூர்வமாக குத்துவிளக்கேற்றி பினாங்கு மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை துவக்கி வைத்தனர்.
மாநில முதல்வர், இரண்டாம் துணை முதல்வர் மற்றும் சபா நாயகர் அதிகாரப்பூர்வமாக குத்துவிளக்கேற்றி பினாங்கு மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை துவக்கி வைத்தனர்.

நமது நாட்டின் முதன்மை பெருநாட்களில் ஒன்றான தீபாவளித் திருநாள் அண்மையில் அனைத்து மலேசிய இந்தியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பினாங்கு வாழ் இந்தியர்களை அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் 6-ஆம் திகதி செபராங் பிறை அரேனா (எஸ்பி அரேனா)எனும் அரங்கத்தில் மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது.
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாஸ் மற்றும் மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்களின் வருகை அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. மாநில ஆளுநர், மாநில முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் வருகை பாரம்பரிய நடனத்துடன் வரவேற்றனர். இத்தீபாவளி கொண்டாட்டத்தைப் பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங், பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து இந்தியர்களின் பாரம்பரியச் சின்னமான குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தை மங்களகரமாகத் தொடக்கி வைத்தனர்.
முதலாவதாக, கண்கவர் இந்தியர்களின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் அரங்கேறியது. நடனம், ஆடல் பாடல் ஆகிய கலவையில் வண்ணமயமாகத் திகழ்ந்த அந்நடனம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. பினாங்கு மக்கள் கூட்டணி அரசின் ஆதரவுடன் நடைபெற்ற இத்தீபாவளி கொண்டாட்டத்தில் மக்கள் திரளாக வந்திருந்தனர். அதற்கேற்றவாறு, மக்கள் அரங்கத்தில் அமர்ந்து வசதியாக உணவு பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தனர்.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பொது மக்கள்.
தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பொது மக்கள்.

நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் கீழ்ச் செயல்படும் பினாங்கு மாநில அரசு இந்திய மக்களின் தேவையை ஒரு போதும் புறக்கணித்ததில்லை என்று பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.
பினாங்கு மாநில அரசு கல்வி மற்றும் மனித மூலத்தனம் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் செலுத்துகிறது. ஜெர்மன் தொழிற்பயிற்சி திட்டம் பினாங்கு தொழிற்திறன் மேம்பாட்டுக் கழகம், அனைத்துலக தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது என்று சிறப்புரையாற்றிய பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு, மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாநில அரசு ரிம2லட்சம் வழங்கியது. இது போன்ற பெருநாள் கொண்டாட்டங்கள் பல்லின மக்களை ஒன்றுபடுத்தி நல்லிணக்கத்தை ஓங்கச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.} else {