“பெர்டா” நில விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்

பினாங்கு கூட்டரசு முன்னேற்ற வாரியம் (பெர்டா) சந்தை கொள்முதல் விலையைக் காட்டிலும் மிகக் குறைவாக தெற்கு செபராங் பிறை, தொக் கிராமாட் பகுதியில் அமைந்துள்ள நிலத்தை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் இரசாக் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறார். page (1)
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில், கிராம மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினரான டாக்டர் அபிப் பாஹாருடின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் பெர்டா நில விவகாரம் தொடர்பாகப் புகார் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பதமுன் தெரிவித்தார். “பெர்டா போன்ற கூட்டரசு முகவர்களில் ஊழல் நடத்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார் “.
மாநில அரசாங்க சார்பில் அனைத்து ஆவணங்களும் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கப்பட்டது,. இதன் மூலம் விசாரனைத் தொடர்வதற்கு இலகுவாக இருக்கும் என்றார்.
“பெர்டா” திட்டங்கள் பிரதம துறை அமைச்சின் கீழ் செயல்படுவதால் இந்நில விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட அபிப் கூறினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மாலிக் அப்துல் காசிம், சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் அரசியல் செயலாளருமான வோங் ஒன் வாய், மாநகர் கழக் உறுப்பினர் திரு குமரேசன் மற்றும் பல கலந்து கொண்டனர்.
மக்களின் பொது நிலங்கள் பாதுகாக்கும் பொருட்டு முதல்வர் லிம் குவான் எங் இந்நிலம் தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் கொடுக்கப் பணித்துள்ளார் . இத்தீர்மானம் மாநில அரசாங்க கூட்டத்தில் எடுக்கப்பட்டது என மேலும் தெரிவித்தார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);