பேராசிரியர் இராமசாமி தலைமைத்துவத்தின் கீழ் இந்து அறப்பணி வாரியம் மீண்டும் முன்னோக்கிச் செல்லும்

Admin

ஜார்ச்டவுன் – “பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் இந்தியர்களின் நிலம், சொத்துடைமை, இடுகாடுகள், ஆலயங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது.

” கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் அதன் நிர்வாகம் மற்றும் சொத்துடைமை நிர்வகிப்பு மேம்பாடுக் கண்டு ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் வருவாய் பெறுகிறது. 2008 முதல் 2021-ஆம் வரை 2,833 அரசு மற்றும் தனியார் உயர்க்கல்வி மாணவர்களுக்கு ரிம4,031,099.33 நிதி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளன.

“இந்து அறப்பணி வாரியம் சமயம் மட்டுமின்றி இந்தியர்களின் சமூகநலன், கல்வி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் என அனைத்து கூறுகளுக்கும் முன்னுரிமை வழங்கி முன்னெடுத்துச் செல்கிறது,” என 2022-ஆம் ஆண்டுக்கான இந்து அறப்பணி வாரியத்தின் நியமனம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.


இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தலைமையில் 11 ஆணையர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்து அறப்பணி வாரியத்தின் செயலாளராக திரு சுரேந்திரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். இந்த ஆணையர் நியமனப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு சாரா இயக்க உறுப்பினர்களும் இடம்பெறுகின்றனர்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ்
இந்து அறப்பணி வாரிய ஆணையர்களின் நியமனக் கடிதத்தை எடுத்து வழங்கினார்.

மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்து அறப்பணி வாரியத்திற்கு ரிம1.5மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்குகிறது. மேலும், இந்த வாரியத்தின் கீழ் மாநில அளவிலான தைப்பூசம் மற்றும் பொங்கல் கொண்டாட்டம்
வழிநடத்தப்படுகிறது.

தற்போது அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம், குயின் ஸ்ரிட், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் என 13 ஆலயங்கள் இந்த வாரிய நிர்வாகத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படுகிறது.