மாணவர்களிடையே கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும் – குமரேசன்

Admin

பத்து உபான் – ‘மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் குறிப்பாக மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை நடத்துவேன் என குறிப்பிட்டதற்குச் சான்றாக இளம் ஆய்வாளர் திட்டம்திகழ்கிறதுஎன பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தமது வரவேற்புரையில் கூறினார்.

இளம் ஆய்வாளர் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்

அண்மையில் பத்து உபான் சட்டமன்ற தொகுதி மற்றும் பினாங்கு தேக் டோம் ஏற்பாட்டில் இளம் ஆய்வாளர் திட்டம்தாமான் பெகாகா சமூக மற்றும் முன்னேற்ற கழக மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வு பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாக நடத்தப்பட்டது.

மாணவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கல்விகேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும்என தமதுரையில் வலியுறுத்தினார்.

மேலும், கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் திட்டங்களை தொடர்ந்து பத்து உபான் சட்டமன்ற தொகுதியில் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இளம் ஆய்வாளர் திட்டத்தை இலவசமாக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பத்து உபான் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழக மண்டபத்தில் இணையத்தள வசதியுடன் கூடிய மினி நூல்நிலையம் அமைக்க இலக்கு கொண்டுள்ளார். அவ்வட்டார மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடவும் இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் சட்டமன்ற உறுப்பினர்.

தொழிற்புரட்சி 4.0 எதிர்நோக்க மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் பீடுநடைப்போட வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனை ஆற்றலும் புத்தாக்க திறனும் மேலோங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தனார்.