மாணவர்களிடையே மின் கற்றல் கல்வியை ஊக்குவிக்க மடிக்கணினி நன்கொடை வரவேற்கப்படுகிறது

Admin

ஜார்ச்டவுன் – கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பினால் கடந்த மார்ச், 18 முதல் செயல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமலாக்கத்தால் பள்ளி மாணவர்கள் புதிய இயல்புக்கு ஏற்றவாறு மின் கற்றல் செயல்முறைக்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், மின் கற்றல் கணினி திட்டத்தின் செயற்குழு மூலம் மாநில அரசு குறிப்பாக மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேவையான கணினி பங்களிப்புகளை வழங்க முன்வருவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நேரத்தில், அவர் பான் சீவ் ஹோண்டா தனியார் நிறுவன தலைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். டத்தோ ஸ்ரீ டத்தோ விரா தான் ஹுய் ஜிங் இன்று 90 மடிக்கணினிகள் மற்றும் 10 கணினிகளை மாநில அரசிடம் நன்கொடையாக ஒப்படைத்தார்.

“பெரும்பாலான பள்ளிகளில் இந்த மின் கற்றல் செயல்முறை அமலாக்கத்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக, கெடாவில் கோவிட்-19 புதிய வழக்கு பதிவுக் காரணமாக சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; எனவே மின்னியல் கற்றல் ஒரு புதிய இயல்பாக தற்போது ஆகிவிட்டது என நம்பிக்கைத் தெரிவித்தார்.

“தற்போதைய சூழலில் சில பள்ளிகளில் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதிய கணினிகளை நன்கொடையாக வழங்குதல் அல்லது பயன்படுத்தப்பட்ட கணினிகளை சரிசெய்து நன்கொடையாக கொடுப்பது வரவேற்கத்தக்கது.

மேலும், தனியார் துறைகளும் தனிநபர்களும் இந்த மின் கற்றல் திட்டத்தை தொடர்ந்து ஆதரிக்க முன்வருவார்கள், ”என்று கொம்தாரில் நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மாநில முதல்வர் சாவ் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மகளிர், குடும்ப, சமத்துவ மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத அலுவல் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங், இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ மற்றும் மாநில தலைமை செயலாளர் டத்தோ அப்துல் இரசாக் ஜாபார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து மின்னியல் கற்றல் செயல்முறையைத் தொடர வேண்டியிருப்பதால், மாநில அரசு கடந்த மே மாதம் முதல் பினாங்கு மின் கற்றல் கணினி திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 456 கணினிகள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டு, பி40 குடும்பங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதே செய்தியாளர் சந்திப்பில், மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் மலேசிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சங்க (சமென்தா) தலைவர் கோய் சிவ் குவானிடம் இருந்து 12,000 முகக் கவசங்களை பெற்றுக்கொண்டார்