மாநில அரசு தீவு, செபராங் பிறை இடையிலான வளர்ச்சி இடைவெளியைக் குறைக்க உத்வேகம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு நிலையான மாநில வளர்ச்சியை அடைய தீவுக்கும் செபராங் பிறை இடையே சமச்சீர் வளர்ச்சியை மேம்படுத்த தொடர்ந்து கவனம் செலுத்தும்.

முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், இந்த குறிக்கோளை அடையும் பொருட்டு மாநில அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது, குறிப்பாக பினாங்கு மாநில கட்டமைப்புத் திட்டம் 2030 (RSNPP 2030) 24 அக்டோபர் 2019 இல் அரசிதழ் செய்யப்பட்டது.

“RSNPP 2030 என்பது நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் சட்டம் 1976 (சட்டம் 172) விதிகளின் கீழ் உள்ளூர் திட்டம் (RT) மற்றும் சிறப்பு பகுதி திட்டத்தில்(RKK) நில பயன்பாட்டு பரிந்துரைகள் மற்றும் விரிவான செயல் திட்ட வரைப்பட வடிவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

“RT மற்றும் RKK தயாரிப்பு செயல்முறையானது தற்போது முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான மேம்பாட்டிடை திட்டமிடுவதில்
சமீபத்திய மக்கள்தொகை தரவு, நில பயன்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து உள்ளீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது,” என்று முதல்வர் சட்டமன்றத்தில் தொகுப்புரை வழங்கும் போது இவ்வாறு கூறினார்.

மாநில அரசு, பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) மூலம் செபராங் பிறை பகுதியில் கூடுதல் வளர்ச்சியை செயல்படுத்த பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது, என்று அவர் கூறினார்.

“பி.டி.சி பிரதான திட்டத்தின் கீழ் ‘பசுமை மற்றும் விவேக நகரத்தை’ நோக்கி மாநில தீவு மற்றும் செபராங் பிறையில் சமச்சீர் மேம்பாட்டை வழிநடத்த இணக்கம் கொள்கிறது.

“அது தவிர, பண்டார் காசியா பெருந்திட்டத்தில் வீடுகள், வணிகம், கல்வி, மருத்துவம் மற்றும் தொழில்துறை என கலப்பு மற்றும் ஒருங்கிணைந்த மேம்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

“மாநில அரசு பத்து காவான் பகுதியில் தொழில்துறை மேம்பாடு உட்பட பல மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

செபராங் பிறை துரித வளர்ச்சி அடையும் வேளையில் போக்குவரத்து நெரிசல், கழிவு மேலாண்மை, நதி மாசுபாடு மற்றும் நீர் வழங்கல் போன்ற சில பிரச்சனைகளால் மக்கள் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, செபராங் பிறை துரித வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் வேளையில்
சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளும்
உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.

“இருப்பினும், பினாங்கில் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கு நிறைய ஒதுக்கீடு தேவைப்படுகிறது. ஏனெனில், மாநில அரசின் நிதித் திறனுக்கு அப்பாற்பட்ட பல உள்கட்டமைப்பு திட்டங்களும் உள்ளன,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பினாங்கு2030 இலக்கில்
கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடையிலான சமூக-பொருளாதார இடைவெளியைக் குறைக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

“மாநில அரசு கிராமப்புறங்கள் உட்பட அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளை வழங்குவதற்கு இணக்கம் கொள்கிறது.

“மாநில அரசு தொடர்ந்து உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலை இணைப்புகளை சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேம்படுத்துகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.