மாநில அரசு பினாங்கு இந்து சங்கத்திற்கு கோவிட் -19 பொருளுதவி வழங்கியது

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இன்று கொம்தார் வளாகத்தில் வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு  உதவும் நோக்கில் 20,000 முகக் கவசங்களையும் 96 போத்தல் கைத்தூய்மிகளையும் பினாங்கு இந்து சங்கத் தலைவர் முருகையாவிடம் வழங்கியது.

இருப்பினும், இந்த உதவிகள் தற்காலிக நிவாரணம் என்றும், வாழ்க்கைக்கும் வாழ்வாதாரங்களுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பது எளிதானது செயல் அல்ல, ஆனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தும் மத்திய அரசின் முயற்சியால், படிப்படியாக அதிகமான துறைகள் திறக்க அனுமதிக்கப்படும்,” என்று கொம்தாரில் நடைபெற்ற  பினாங்கு இந்து சங்கத்திற்கு கோவிட் -19 பொருளுதவி வழங்கும் நிகழ்ச்சிக்குப்  பின்னர் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் இவ்வாறு  கூறினார்.

மாநில அரசு வழங்கிய முகக் கவசங்கள் மற்றும் கைத் தூய்மிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதை இந்து சங்கம்  உறுதி செய்ய வேண்டும். கடந்த காலங்களின் ஆற்றிய சேவையை பினாங்கு இந்து சங்கம் தொடர்ந்து பொதுமக்களுக்கு  வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த கோவிட்-19 தொற்று காலக்கட்டத்தில் உணவுக் கூடைகள், மருத்துவப் பொருட்கள் அல்லது பிற உதவிகள் வழங்கிய  அரசு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பிற நன்கொடையாளர்கள்  அனைவரும் பொதுமக்களால்  போற்றப்படுவர்.

“பினங்கு மாநிலத்தில் கோவிட்-19 தாக்கத்தால் வருமானத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலைமையில் இருக்கும்
குடும்பங்களையும் தனித்துவிடாமல் அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் சென்றடைவதை உறுதி படுத்தப்படும்,” என மாநில் முதல்வர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, இந்த கோவிட்-19 தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கி மாநில அரசிற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து அரசு சாரா இயக்கங்களுக்கும்  தனது நன்றியை மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு இந்து சங்கத் தலைவர் முருகையா, துணைத் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் செயலாளர் பரஞ்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பினாங்கு இந்து சங்கத் தலைவர் கடிதம் அனுப்பிய இரண்டு நாட்களில் மாநில அரசு விண்ணப்பத்தை பரிசீலித்து இவ்வுதவியை வழங்கியதற்கு தனது நன்றியை நவிழ்ந்தார். மாநில அரசு கடந்த மாதமும் இந்தியர்களின் நலனுக்காக இச்சங்கத்திற்கு ரிம20,000 மானியம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .

மாநில அரசு வழங்கிய இம்முகக்கவசங்களை அடுத்த வாரம் தொடங்கி மாலை 5 முதல் 7 மணி வரை தர்ம சிவாநந்தா கிளினிக்கில் பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த எட்டு ஆண்டுகளாக பினாங்கு இந்து சங்கம் இம்மாநில இந்தியர்களின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் சிறந்த சேவையை நல்கி வருகின்றது. மருத்துவ முகாம், கல்வி உதவிகள், கைவிடப்பட்ட  சடலங்களை அடக்கம் செய்தல், வசதிக்குறைந்தோருக்கு உதவுதல் மற்றும் மேலும் பல அரிய சேவைகளை வழங்கி வருகின்றனர்.

பினாங்கு வாழ் இந்தியர்களுக்கு ஏதெனும் உதவிகள் தேவைப்பட்டால் பினாங்கு இந்து இந்து சங்க முகநூல் (Penang Hindu Association) வாயிலாக அல்லது அதன் தலைவர் முருகையாவை 016-4449246 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.