மாநில அரசு பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டத்தில் 2.1 ரிம4.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாநில பொருளாதார துறையை மீண்டும் மேம்படுத்த பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டத்தில் 2.1 ரிம 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

மாநில அரசு இதுவரை இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் பொருட்டு ரிம155.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியது பாராட்டக்குரியதாகும்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தால் தற்போது பொருளாதாரம் மீட்சி நிலை கண்டு வரும் வேளையில் பாதிக்கப்பட்ட ஆறு இலக்கு குழுவினருக்கு உதவும் பொருட்டு
மூன்றாவது உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

“இந்த உதவித் திட்டம் சம்பந்தப்பட்ட இலக்கு குழுவினர் தங்களின் வியாபார செயல்பாட்டு நிதி செலவை குறைப்பதோடு பணப் புலக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு அறிவிக்கப்பட்டது
என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.

“இந்த உதவித் திட்டம் அதிகமாக பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு உடனடி உதவியை வழங்குவதோடு, பி.கே.பி-க்குப் பிறகு வியாபாரத் துறை மீட்சி காணும் வேளையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை தொடர்ந்து அபிவிருத்தி செய்வதையும் உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், தொழிலாளர்கள்
உற்பத்தித்திறன் மூலம் மீண்டும் எழுந்து நிற்கவும், தன்னையும் தன் குடும்பங்களை கவனித்துக்கொள்வது மட்டுமின்றி மாநிலத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரவும் இது உதவுகிறது, ”என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு க் கூட்டத்தில் முதல்வர் கூறினார்.

பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டத்தில் 2.1 மாநில விவசாயத் துறையில் பதிவுசெய்துள்ள 1,142 விவசாயிகளுக்கும் தலா ரிம400 மதிப்பு கொண்ட விவசாய உள்ளீட்டு ஊக்கத்தொகை பொருட்கள் வழங்கப்படுகிறது என்று கொன் யாவ் கூறினார்.

“மாநில அரசு மாநில விவசாயத் துறையின் மூலம் கோவிட் -19 தாக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கரிம உரங்கள் அல்லது பயிர் விதைகள் போன்றவை காய்கறிகள் நடுவதற்குப் வழங்குதல்; பருவகாலமற்ற பழங்கள், மற்றும் தொழில்துறை பயிர்களை பயிரிட விநியோகிக்கும்” என தெரிவித்தார்.

மாநிலத்தில் பதிவுசெய்துள்ள 439 அனைத்து வகை பள்ளிகளின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கும் ரிம500 மதிப்புள்ள சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்.

“மாநிலத்தில் உள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனங்களுக்கு ரிம500 சிறப்பு நிதியாக வழங்கப்படும், இது மொத்தமாக 100 தொழில்முனைவோருக்கு பயனளிக்கும்.

“இத்திட்டத்தில், பதிவுசெய்யப்பட்ட 1,771 முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தளங்களுக்கும் இம்முறை நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வழிபாட்டு தளங்களுக்கும் சிறப்பு நிதியாக ரிம1,000 கொடுக்கப்படும்,” என்று விளக்கமளித்தார்.

மாநில அரசு, மலேசிய சங்கம் பதிவுத் துறையில் (ROS) பதிவுசெய்யப்பட்ட
3,996 நிறுவனங்கள் அல்லது சங்கங்களுக்கு ரிம500 மதிப்புள்ள சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்றும் கொன் யாவ் கூறினார்.

“கூடுதலாக, மாநிலத்தில் உள்ள 150 பத்திரிகை மற்றும் புத்தக விற்பனை விநியோகிப்பாளர்களுக்கும் ரிம500 நிதியுதவி வழங்கப்படும்.

இந்த நிதியுதவி பெறுவதற்கான அனைத்து விண்ணப்பங்களும் பினாங்கு மாநில அரசின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான, www.penang.gov.my மூலம் வருகின்ற ஆகஸ்ட்,28 முதல் விண்ணப்பம் செய்யலாம். மேலும், விண்ணப்பம் கிடைத்தவுடன் விரைவில் நிதியுதவி வழங்கப்படும்.

“எனவே, மாநில அரசு
இந்த உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் தொழில் நடவடிக்கைகளைத் தொடர ஓரளவிற்கு உதவக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.