நிபோங் திபால் – பினாங்கு மாநில அரசாங்கம் பைராம் தோட்ட நிலம் கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்ப்பள்ளி மற்றும் ஓர் ஆலயத்திற்கான இடமாற்றத் திட்டத்தை ரிம20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்
நிறைவுச் செய்துள்ளது என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகிறார்.
இத்திட்டத்தின் கீழ் 68 குடும்பங்கள், பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் ஓர் ஆலயம் உட்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2016 ஆண்டுக்கு முன்பு தொடங்கிய நிலம் கையகப்படுத்தும் செயல்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
“நிலம் கையகப்படுத்தும் செயல்முறை 2016 ஆண்டுக்கு முன்னதாகவே தொடங்கியது, அந்த நேரத்தில் இழப்பீடு தொகையும்வ்ஹ் வழங்கப்பட்டது.
பின்னர் மாநில அரசு பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி மற்றும் ஆலயத்திற்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்தது,” என்று இன்று பைராம் தோட்ட மீள்குடியேற்றத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த இடமாற்றத் திட்டத்திற்காக மாநில அரசு ஒரு புதிய இடத்தை வாங்கியதாகவும், ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பல தொழில்நுட்ப சவால்கள் காரணமாக இத்திட்டம் முடிவடைய கால தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இந்த செயல்முறை நீண்டதாகவும், தொற்றுநோய் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்டாலும், இத்திட்டம் தற்போது அனைத்து தொடர்புடைய தரப்பினரிடமும் ஒப்படைக்கத் தயாராக உள்ளது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று அவர் கூறினார்.
68 குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்கப்பட்டதாகவும், ஒரு தேவாலயம் மற்றும் கோயில் நிர்மாணிப்புக் கட்டி முடிக்கப்பட்டு அந்தந்த தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சாவ் கூறினார்.
“இதன் மூலம், பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் முறையாக இடமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது,” என தெரிவித்தார்.
இதில் நிலம் கையகப்படுத்தல் செலவுகளைத் தவிர்த்து, கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே ரிம20 மில்லியன் செலவு ஈடுகட்டப்பட்டது என்றும் கூறினார்.
இந்தத் திட்டம் செயல்படுத்துவதன் மூலம் குடியிருப்பாளர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆலய பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் அளிக்கும் என்று சாவ் கூறினார்.
“இந்த திட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
தனது உரையில், ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஹெங் மூய் லாய், ல பைராம் தோட்ட கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (எம்.பி.கே.கே), பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) மற்றும் முதலமைச்சர் ஒருங்கிணைந்த வாரியம் (சி.எம்.ஐ) ஆகியோரின் அயராத முயற்சிகளுக்கு சாவ் நன்றித் தெரிவித்தார்.
“பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுகாதார அபாயங்களைத் தாங்கி வந்த குடியிருப்பாளர்களுக்கு இந்த முன்முயற்சி திட்டம் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக புலாவ் புருங் குப்பைக் கிடங்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்ருயும் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், இடம்பெயர்ந்த சமூகத்தை ஆதரிப்பதற்காக வீடுகள், இரண்டு மாடி தமிழ் தொடக்கப்பள்ளி கட்டிடம் மற்றும் இந்து ஆலயம் ஆகியவை கட்டப்பட்டன, மேலும் பிற அத்தியாவசிய வசதிகளும் கட்டப்பட்டன.
நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான ஃபத்லினா சிடெக், கல்வி முன்னேற்றத்திகான மாநிலத்தின் உறுதிப்பாட்டிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கல்வி ஒருபோதும் யாரையும் ஒதுக்கி வைக்கக்கூடாது என்றும், பழைய தமிழ்ப் பள்ளிக்குப் பதிலாக புதிய இரண்டு மாடி பள்ளிக் கட்டிடத்தைக் கட்டியதற்காக பினாங்கு மாநில அரசுக்கு நன்றித் தெரிவித்தார்.
மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து, பினாங்கில் கல்வி மற்றும் வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற்றும் அக்கறையுள்ள மற்றும் பொறுப்பான நிர்வாகமாக செயல்படும் மாநில அரசையும் ஃபத்லினா பாராட்டினார்.
இந்த மாத இறுதியில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, இத்திட்டம் சரியான நேரத்தில் நிறைவடைந்ததாக மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக், செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமீத் மற்றும் சி.எம்.ஐ பொது மேலாளர் டத்தோ எஸ். பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.