மாநில அரசு மீனவர்களுக்கு ரிம1மில்லியன் நிதி ஒதுக்கீடு

தெலுக் பஹாங்பினாங்கு மாநில அரசு கடலோர மீனவர்களுக்கு வலைகள் மற்றும் தேவைக்குரிய பொருட்கள் வாங்குவதற்கு ரிம1மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது.

தெலுக் பஹாங் சட்டமன்ற உறுப்பினர் சோல்கிப்லி முகாமட் லசிம் ரிம1,020,000 மதிக்கத்தக்க மாதிரி காசோலையை மீனவர் சங்க பிரதிநிதியிடம் வழங்கினர். ஏறக்குறைய 2,000 மீனவர்கள் இந்த நிதியுதவிப் பெற்று பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுக் பஹாங் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த 239 மீனவர்கள் என்.பி.கே மையத்தில் ரிம400 ரொக்கப்பணமாகப் பெற்றுக்கொண்டனர். இச்சங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் பந்தாய் ஆச்சே, தெலுக் பஹாங், பத்து பிரிங்கி, தஞ்சோங் பூங்கா, தஞ்சோங் தொகோங் மற்றும் கெர்னி டிரைவ் பகுதியில் இருந்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்களின் வருமானம்(மீன் பிடிப்பு) குறைந்துவிட்டது என நன்கு உணர முடிகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு விற்பனை வருவாய் ரிம2பில்லியனாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரம் காண்பிக்கின்றது. இந்த புள்ளிவிபரம் மீன் விலை அதிகரிப்பு மற்றும் பெரிய படகுகளில் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கை குறிப்பதாக,” சட்டமன்ற உறுப்பினர் சோல்கிப்லி சூளுரைத்தார்.

மாநில அரசு தொடர்ந்து மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவிக்கரம் நீட்டும். பொது மக்களுக்கு அதிகமான புரதசத்து(மீன் வடிவில்) வழங்குவதற்கு மீனவர்கள் அல்லும் பகலும் உழைக்கின்றனர், ” என பாராட்டினார்.

இந்நிகழ்வில் மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் (எல்.கே..எம்) பினாங்கு மாநில இயக்குனர் டாக்டர் நிக் யஹ்யா அப்துல் ரஹ்மான், தெலுக் பஹாங் மீன்வள சங்கத்தின் தலைவர் ஜோஹரி முகமது, வடகிழக்கு மாவட்ட பிரதிநிதி நர்ஷாம்ஷினாஸ் ஷம்சுடின் மற்றும் பாலிக் புலாவ் கிராம தலைவர் முகமது பாருக் வருசாய் முகமது கலந்து கொண்டனர்.