மாநில அரசு 2030 ஆண்டுக்குள் 600,000 மரங்களை நட இலக்கு

Admin

டத்தோ கெராமாட் – பினாங்கு மாநில அரசு 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 600,000 மரங்களை நடுவதற்கான புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், மாநில அரசு முன்னதாக புதிய மரங்களை நடுவதற்கான இலக்கை 500,000 மரங்களாக உயர்த்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டில், மாநில அரசு 2030 ஆம் ஆண்டிற்குள் 500,000 புதிய மரங்களை நடுவதற்கான இலக்கை அதிகரித்துள்ளது.

“மேலும்,  தேசிய ரீதியில் ஓர் ஆண்டுக்கு நாடு முழுவதும் 10 மில்லியன் மரங்களை நடுவதற்கான மத்திய அரசின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிப்பதோடு, மாநிலத்தின்  தேசிய ரீதியில் பிரமிக்கும்  குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்கும் இலக்கையும்  நோக்கி இத்திட்டம் பயணிக்கிறது,” என்று ஜாலான் யார்க்  அருகில் உள்ள சமூக பூங்கா திட்ட தளம்
ஆய்வினை நேரில் சென்று பார்வையிட்டப் பிறகு  செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், PLANமலேசியா@பினங்கு துணை இயக்குநர் (திட்டமிடல்) முகமது பஷீர் சுலைமான்; PLANமலேசியாவின் முதன்மை உதவி இயக்குனர் முகமாட் ரோஜாமி அப்துல் ரஹீம்; பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்களான நிக்கோலஸ் தெங் ஜீ வே மற்றும் ஹர்விந்தர் சிங் மற்றும் எம்.பி.பி.பி ஜெலுத்தோங் மண்டல பொது சுகாதார உதவியாளர் , கூ எங் சோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்து தெரிவித்த டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப்,  2018 முதல் 2021, நவம்பர்  வரை, பினாங்கு மாநிலத்தில்  இரண்டு ஊராட்சி மன்றங்கள் இணைந்து  மொத்தம் 470 050 மரங்கள் நடப்பட்டன, என்றார்.

பினாங்கு மாநகர் கழகம் 97,981 மரங்களையும், செபராங் பிறை மாநகர் கழகம் 61,779 மரங்களையும் நட்டுள்ளன.

“மாநில அரசு கூடுதல்  மரங்கள் நடும் திட்டத்தைத் தொடரும். மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் 600,000 மரங்கள் நடும்  இலக்கை அடைய முடியும்,” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னதாக, இங்குள்ள எம்.பி.பி.பி-க்குச் சொந்தமான நிலத்தில் உள்ள சமூகத் தோட்டத்தை ஜெக்டிப் பார்வையிட்டார்.

“நிலம் மற்றும் காலி இடங்களின்  பயன்பாட்டு அதிகரிக்க இது போன்ற சமூகத் தோட்டத் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தலாம், என்றார்.

இந்த முயற்சி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் நிதிச் சுமையையும் குறைக்கிறது,” என்று அவர் விளக்கமளித்தார்.

மொத்தமாக, 100 ‘செட்’ ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் தோட்டக் கருவிகளை உள்ளூர் மக்களுக்கு விநியோகிக்க கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (எம்.பி.கே.கே) பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பினாங்கு சமூகத் தோட்டத் திட்டம் PLANMalaysia @Pulau Pinang, எம்.பி.பி.பி மற்றும் டத்தோ கெராமாட் சேவை மையத்தின் ஒத்துழைப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.