மாற்றுதிறனாளிகளும் சாதனைப் படைக்க முடியும் -பேராசிரியர்

Admin

செபராங் பிறை – பினாங்கு மாநில அரசின் ஏற்பாட்டில் மூன்றாவது மாற்றுதிறனாளிகளுக்கான தொழிலியல் கண்காட்சி அண்மையில் செபராங் பிறை அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு இடம்பெற்ற இக்கண்காட்சி இளைஞர் குறிப்பாக மாற்றுதிறனாளிகளுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இந்நிகழ்வினில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெற்ற மாற்றுத்திறனாளிகள்

இந்நிகழ்வின் முக்கிய நோக்கமானது மாற்றுத்திறனாளிகளிடையே ஓர் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை வெளிக்கொண்டு வருவதே ஆகும். எனவே அவர்களின் திறமை மற்றும் ஆற்றல்களை அனைத்துத் துறைகளிலும் ஈடுப்பட இத்தொழிலியல் கண்காட்சி ஓர் ஊன்றுகோளாக அமையும் என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தமது வரவேற்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.அதோடு, தொழில் முனைவர்கள் மாற்றுதிறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் அவர்களின் திறனுக்கு ஏற்ற பணி நிமித்தம் செய்வதன் மூலம் சமூகத்தில் அவர்களும் எல்லோரையும் போல் சுதந்திரமாக வாழவும் தேசிய வளர்ச்சிக்கும் பங்களிக்கவும் முடியும் எனவும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

இத்தொழிலியல் கண்காட்சியில்  தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒத்துழைத்துப்பில் 60-க்கும் மேற்பட்ட கூடங்கள் அமைக்கப்பட்டன. இதனிடையே, ஒரு சில தொழிற்சாலை நிர்வாகம் அங்கேயே நேர்முக தேர்வை நடத்தினர் என்பது பாராட்டக்குறியதாகும். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான ஒரு எதிர்காலத்தை தேடினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“பினாங்கு மாநிலத்தில் குறைந்தது 1% மாற்றுத்திறனாளிகள் அரசு துறையில் வேலைக்கு அமர்ந்த்தப்பட வேண்டும் என்பதில் ஊனமுற்றோர் செயல்திட்டம் 2016-2022 செயல்படுத்தப்படும்; இது மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணரவும் அவர்களை வேலைக்கு அமர்த்தவும் ஒரு மையக்கல்லாக அமையும்”, என்றார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி. மலேசியாவில் மட்டும் சமூகநல துறையின் கீழ் சுமார் 513,519 பதிவுப்பெற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
தற்போது விளையாட்டுத் துறையில் உலகதர வரிசையில் மாற்றுதிறனாளியான சுரேஷ் அம்பு ஏய்தும் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளதை மனதாரப் பாராட்டினார். இவர்களும் அனைத்து துறையிலும் வெற்றிப்பெற முடியும் என்பதற்கு இம்மாதிரியான வெற்றிகள் சான்றாக அமைகின்றது