முன்னாள் பினாங்கு மாநில விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம்

பேராசிரியர் ப.இராமசாமி காற்பந்து துறையில் முத்திரை பதித்த திரு ஜெயபாலன் மற்றும் திரு சம்பந்தன ஆகியோருக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார்
பேராசிரியர் ப.இராமசாமி காற்பந்து துறையில் முத்திரை பதித்த திரு ஜெயபாலன் மற்றும் திரு சம்பந்தன ஆகியோருக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார்

விளையாட்டுத் துறையில் பல வெற்றிகளும் சாதனைகளும் படைத்த வீரர்களுக்கு முன்னாள் விளையாட்டாளர்கள் கழகம் பாராட்டு விழா நடத்தியது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. முதல் முறையாக நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவில் 100 முன்னாள் விளையாட்டாளர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டன.
காற்பந்து, ஹோக்கி, நெடுவோட்டம் மற்றும் பல விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்து பினாங்கு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமைச் சேர்த்த வீரர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தது பாராட்டக்குறியதாகும்.
வரவேற்புரையாற்றிய பேராசிரியர் ப.இராமசாமி இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மற்றும் அவர் தம் குழுவினருக்கும் பாராட்டு மாலை சூட்டினார். கடந்த காலங்களில் வெற்றி மகுடங்கள் சூடிய விளையாட்டாளர்களைப் பாராட்டுவதன் வாயிலாக அவர்களின் சாதனைகள் நினைவுக்கூற முடிகிறது. விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கும் பொருட்டு மாநில இரண்டாம் துணை முதல்வர் ரிம2,000 மானியமாக வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
1960-ஆம் ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய காற்பந்து விளையாட்டளராகத் திகழ்ந்த திரு சம்பந்தன் அவர்களுக்குச் சிறப்பு விருது வழங்கி பேராசிரியர் அங்கீகரித்தார் . மேலும், காற்பந்து வீரராகவும் மாநில பயிற்றுநராகவும் விளங்கிய திரு ஜெயபாலன் அவர்களுக்குச் சிறப்பு கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. திரு சம்பந்தன் மற்றும் திரு ஜெயபாலன்ஆகிய இருவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளும் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது.

 நடைப்போட்டி வெற்றியாளர் குமாரி சக்திராணி
நடைப்போட்டி வெற்றியாளர் குமாரி சக்திராணி

1979, 1981, 1983-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற “சீ” விளையாட்டில் மெதுவோட்டப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற குமாரி சக்திராணியும் நிகழ்வில் கெளரவிக்கப்பட்டார். 1981-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற மெதுவோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றதோடு சிறந்த மெதுவோட்ட வீராங்கணை எனும் விருதும் பெற்றார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);