போர்ச் உடனான நல்லுறவு தொடர மாநில முதல்வர் விருப்பம்

pg 5Aஅனைத்துலக நிறுவனங்கள் பட்டியலில் முன்னணி நிலையைக் கைப்பற்றிய ‘ரோபோட் போர்ச்’ (Robert Bosch) Surface-mount technology (SMT) என்னும் நிறுவனத்தின் தொழிழ்நுட்ப, நிபுணத்துவ உற்பத்தியாற்றலை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் அண்மையில் பினாங்கில் அமைந்துள்ள அதன் துணை நிறுவனத்தின் பொறியியல் துறையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் வெற்றி விழாக் கண்டது.
இவ்விழாவைக் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து சிறப்பித்தார். முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி முகமட் ரஷிட் அஸ்னோன். உடன் கலந்துக் கொண்டார்.
ஆசிய கண்டத்திலேயே இக்கிளை நிறுவனம் தான் மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடதக்கதாகும்.. இது தொடர்பாக லிம் குவான் எங் கூறியதாவது, கடந்த 45 ஆண்டுகளாக பினாங்கு தீவில் இயங்கும் போர்ச் நிறுவனம் மாநில அரசாங்கத்துடன் நல்லுறவை வலுபடுத்துவதோடு மட்டுமல்லாது தொழில்நுட்ப மேம்பாட்டு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறது.
இதுமட்டுமின்றி 66 மில்லியன் செலவில் விரிவாக்கம் செய்ய முன் வந்த போர்ச் நிறுவனத்தின் செயல், தற்போதைய பொருளாதார சூழலில் பினாங்கு மாநில முதலீட்டாளர்கள் மத்தியில் முதன்மையிடம் வகிக்கிறது என்னும் கூற்றை மெய்பிக்கின்றது என லிம் குவான் எங் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது போர்ச் நிறுவனத்தின் 66 மில்லியன் முதலீடு இனி தொடர்ந்து ‘பாயான் லெபாஸ்’ தொழில்துறைப் பகுதியின் அலாதி வளர்ச்சிக்கும் அதீத தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் ஒரு மையல் கல்லாகத் திகழும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே போர்ச் நிறுவன உயர் அதிகாரிகளைச் சந்திக்க கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திய லிம் குவான் எங் நம் நாட்டில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் சேதம், பொருட்சேதத்தைக் கருத்தில் கொண்டு பொருளியல் துறையில் வெற்றி நடைப் போடும் போர்ச் நிறுவனம் எதிர்காலத்தில் சுயச்சையாக இயங்கும் மகிழுந்து மற்றும் மோட்டார் வண்டியை உருவாக்கும் முயற்சிக்கு தம்மை ஆயுத்தப்படுத்துவது இத்தகைய இழப்பிற்கு ஒரு சிறந்த நிவாரணையாகத் திகழும் என்னும் அவர்தம் சமூக சிந்தனைக் குறித்த கருத்துக்களையும் இந்நிகழ்வில் முன் வைத்தார்.
இது தவிர போர்ச் நிறுவன (மலேசியா) வணிக மேலாளர் டாக்டர் லி சோங் உரையாற்றுகையில் 2016 ஆண்டின் இறுதி வாக்கில் தற்போது பணி புரியும் 150 பொறியியலாளர் எண்ணிக்கை 220 – ஆக அதிகரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இத்திட்டம் பினாங்கு வட்டாரத்தில் சுமார் 70 பொறியியலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.if (document.currentScript) {