‘முயல்’ ஆண்டில், பொது மக்கள் வாழ்வாரம், மாநில பொருளாதாரம் மேம்பாடு காணும் – முதல்வர் நம்பிக்கை

Admin

பாடாங் கோத்தா – இந்த ஆண்டின் சீனப் புத்தாண்டு அல்லது ‘முயல் ஆண்டு’ வாழ்வின் செழுமையை மேலோங்கச் செய்வதோடு, பல்லின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பொருளாதார மீட்சிக்கான ஆண்டாக உருமாற்றம் காணும் என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று லீ சீ சோங் சூ மண்டபத்தில் நடைபெற்ற பாடாங் கோத்தா சட்டமன்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட நிலம் & பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் மற்றும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்தக் கொண்டாட்டம் சீனப் புத்தாண்டை மட்டும் வரவேற்கவில்லை, மாறாக கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்திலிருந்து பினாங்கு மாநிலம் மீட்சிப் பெற்று வருவதை வரவேற்கும் சிறந்த தருணமாகக் கருதுவதாக முதல்வர் கூறினார்.

பினாங்கு மாநிலத்தை மேம்படுத்தும் உணர்வோடு எதிர்கால சவால்களையும் ஒன்றிணைந்து எதிர்நோக்குவோம்.

“இந்த புத்தாண்டை (முயல் ஆண்டு) முன்னிட்டு தொடர்ந்து முன்னேறுவோம்,”
” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகநலன் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ; சமூக மேம்பாடு மற்றும் முஸ்லிம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், சோங் எங்; இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ; பினாங்கு மாநகர் கழக மேயர் இயோ துங் சியாங் மற்றும் நூற்றுக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டனர்.