விழாக்காலங்களில் வாகனமோட்டிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் – சூன் லிப் சீ

மோட்டர் சைக்கிள் ஓட்டுனருக்குப் பாதுகாப்பு கவச ஆடை அணிவித்தார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ.
மோட்டர் சைக்கிள் ஓட்டுனருக்குப் பாதுகாப்பு கவச ஆடை அணிவித்தார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ.

வருகின்ற தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ “Continental Automotive Components Malaysia Sdn. Bhd” எனும் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்குப் பாதுகாப்பு கவச ஆடை அணிவித்தனர். ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அதிகமான வாகனமோட்டிகளுக்குப் பாதுகாப்பு கவச ஆடை வழங்கப்பட்டன.
“சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை” தொடக்கி வைத்து பேசிய ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ விழாக்காலங்களில் அதிகமான மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்கள் சாலை விபத்தில் பலியாகின்றனர் என்றார். ஜாவி பகுதியில் குறிப்பாக ஜாலான் பெர்செக்குத்துவான், ஜாலான் நெகிரி எனும் இடங்களில் அதிகமான சாலை விபத்துகள் நடைபெறுவதாக அடையாளங்காணப்பட்டுள்ளன என செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர்.
பெருநாள் காலங்களில் அதிகமான வாகனமோட்டிகள் சாலையைப் பயன்படுத்துவதால் சாலை விதிமுறைப் பின்பற்றுவதோடு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சாலையில் பயணிக்க வேண்டும் என்றார். குறிப்பாக மழைக் காலங்களிலும் இரவு நேரத்திலும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் அவசியமாகப் பாதுகாப்பு கவச ஆடையை அணிய வேண்டும். ஏனென்றால், இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அடையாங்காண்பதற்கு இலகுவாக இருக்கும். மேலும், ஜாவி சட்டமன்ற முயற்சியில் சீனப்பெருநாள், நோன்புப் பெருநாள் மற்றும் பல பண்டிகைகளுக்கு வாகனமோட்டிகளை கருத்தில் கொண்டு இப்பாதுகாப்பு கவசம் வழங்கப்படுவது பாராட்டக்குறியதாகும். மேலும், தீபாவளி பெருநாளை முன்னிட்டு ஜாவி சட்டமன்ற தொகுதியில் 1000 கவச ஆடையை இலவசமாக வழங்கப்படும் என்றார்d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);