2018/2019 தவணைக்கான இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் நியமனம்

Admin
இந்து அறப்பணி வாரிய ஆணையாளர்களுடன் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்

நான்காவது முறையாக இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தலைமையில் 15 ஆணையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்து அறப்பணி வாரிய செயலாளராக திரு சுரேந்திரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர்இந்து அறப்பணி வாரிய ஆணையர்களின் நியமன கடிதத்தை பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் எடுத்து வழங்கினார்.

இந்து அறப்பணி வாரிய ஆணையாளர்களுடன் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்

இந்து அறப்பணி வாரியம் திறமையான நிர்வாகத்தால் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துமாறு பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கேட்டுக் கொண்டார்பினாங்கு அரசின் கீழ் செயல்படும் இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் சொத்துகள் மற்றும் ஆலயங்களை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுவதாக மாநில முதல்வர் குறிப்பிட்டார். மேலும், பினாங்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்து அறப்பணி வாரியத்திற்கு வழங்கும் மானியத்தை அதிகரிக்க எண்ணம் கொண்டுள்ளதையும் குறிப்பிட்டாம் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ். 

இம்முறை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ் த/பெ முணியான்டி, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் த/பெ ஆறுமுகம் மற்றும் மலேசிய பினாங்கு இந்து தர்ம மாமன்ற தலைவர் நந்தகுமார் த/பெ வேலு ஆகிய மூவரும் புதிய ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 14-ஆவது பொதுத் தேர்தலில் குறிப்பிடப்பட்டிருந்தபடி மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்து அறப்பணி வாரியம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். இந்தியர்கள் அதிகமாக வாழும் கெடா, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் பஹாங் ஆகிய மாநிலங்களில் முக்கியமாக இந்து அறப்பணி வாரியம் அமைக்க அதற்கான செயற்குழு நியமிக்கப்படும் என மேலும் விவரித்தார்.