2020 பினாங்கு மகளிர் மாநாடு பெண்கள் அரசியல் விவகாரங்கள் மற்றும் நிர்வாகத்தில் அதிகமாக ஈடுப்பட உத்தேசிக்கும் – முதல்வர்

 

ஜார்ச்டவுன் – 2020 பினாங்கு மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வு இம்மாநிலத்தின் ஒரு வரலாற்று நிகழ்வாகத் திகழ்கிறது என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறினார்.

இந்த மாநாட்டின் மூலம் அரசியல் விவகாரங்கள் மற்றும் நிர்வாகத்தில் பெண்கள் பழைய ஸ்டீரியோடைப்பை அழித்து அதிக ஈடுபாடு காட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த மாநாட்டில் பங்கேற்ற 40 உறுப்பினர்களின் பங்களிப்பு பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்ற பாலின நிலைப்பாடுகளை அகற்றுவதற்கான ஒரு உறுதியான சான்றாகத் திகழ்கிறது,” என்று அண்மையில் ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் நில மேம்பாடு மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 400க்கும் மேற்பட்ட பெண்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் அதில் மிகச் சிறந்த 40 உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 40 உறுப்பினர்கள் சிறந்த பங்களிப்பை வழங்குவதாகக் கூறினார்.

இதனிடைய, இந்த மாநாட்டில் கடுமையான போட்டி அமர்வில்
40 உறுப்பினர்களை வெற்றிகரமாக திரையிட்டதற்காக சமூக மேம்பாடு மற்றும் முஸ்லிம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு மற்றும் 2020 பினாங்குமகளிர் அமர்வு செயற்குழுவின் தலைவரும், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் (பி.டபிள்யூ.டி.சி) தலைமை நிர்வாக அதிகாரியுமான ஓங் பீ லெங் ஆகியோருக்கும்
சாவ் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இம்மாநாட்டில், வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர். நோர்லெலா அரிஃபின்; பினாங்கு மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகரும் சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ’அமர் பிரித்பால் அப்துல்லா; சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம்; பெர்மாத்தாங் பாவ் சட்டமன்ற உறுப்பினர், மொஹமட். துவா இஸ்மாயில்; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ், ஜாவி சட்டமன்ற உறுப்பினர் எங் மோய் லாய் மற்றும் புலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ் லீ சுன் கிட் ஆகியோர் இடம்பெற்றனர்.

படம்: வரலாற்று சிறப்புமிக்க பினாங்கு மகளிர் மாநாடு 2020-இல் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கலந்து கொண்டார்.(உடன் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங்)

படம் 1: மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுடன் சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்(நடுவில்)