2022 வரவு செலவு: மாநில அரசு சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு முன்னுரிமை 

Admin

ஜார்ச்டவுன் –  மாநில அரசு, கோவிட்-19 தாக்கத்திற்கு முன்பு இம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய பங்களிப்பு வழங்கிய சுற்றுலாத் துறையை மீண்டும் மீட்சிப் பெற ரிம50 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

பினாங்கு மாநிலத்தை  பிரதான சுற்றுலாத் தலமாக உருமாற்றம் காணவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படும் என்று முதல்வர்  சாவ் கொன் யாவ்  கூறினார்.

“கோவிட்-19 தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்று என்பதை மாநில அரசு ஒப்புக்கொள்கிறது.

“எனவே, மாநில அரசு 2022 வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத் துறை மீண்டும்  மீட்சிப் பெறவும் அதனை மேம்படுத்தவும் கூடுதல் கவனம்   செலுத்துகிறது,” என 14வது பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் நான்காவது தவணையின் இரண்டாவது கூட்டத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவை  தாக்கல் செய்யும் போது இவ்வாறு கூறினார். 

சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்  மேம்பாட்டுத் திட்டங்களுக்கான செலவினங்கள்;  சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள்; சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தல்; மற்றும் சுற்றுலா முகவராகச் செயல்படும் நிறுவனங்களுக்கான மானியங்கள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தல் உட்பட
இம்மாநில சுற்றுலாத் துறையை மீட்சிப் பெற செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த முயற்சியினை தொடர்ந்து  அடுத்த ஆண்டுகளில் சுற்றுலா பிரச்சாரத்தின் கருப்பொருளாக ‘‘Experience Penang Year’ என அறிமுகப்படுத்தி மேம்படுத்தப்படும். 

“மேலும், ‘பினாங்கு உலகளாவிய சுற்றுலா'(Penang Global Tourism) நிறுவனம் பல்வேறு  பிரச்சாரங்கள், விளம்பரம் மற்றும் ஊடகங்கள் மூலம் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கவும், மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஊக்கப்படுத்தவும், வலுப்படுத்தவும் மற்றும் ஈர்க்கவும் தனது முயற்சிகளைத் தொடரும்,” என்று அவர் விளக்கமளித்தார்.

பினாங்கு சுற்றுலாத் துறையை  இயங்கலை வழி விளம்பரப்படுத்துவதற்கான முயற்சிகள் சமூக ஊடக தளங்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொன் யாவ் கூறினார்.

‘World Wonders of Penang, Penang Then & Now, Penang Through Art dan Penang Product Feature’ ஆகியவை நடத்தப்பட்ட பிரச்சாரங்கள் பட்டியலில் அடங்கும்.

“மாநில அரசு வெளிநாட்டு வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் இயங்கலை ‘webinar’ பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு சந்தைகளில் பினாங்கின் சுற்றுலா முத்திரையைப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

“அதே நேரத்தில்,  2021-2030 பினாங்கு சுற்றுலா பெருந்திட்டத்தின் கீழ், கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பான பகுதியை உருவாக்க எடுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகளையும் மேம்படுத்துவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மாநில அரசு, பினாங்கு சுற்றுலா சின்னமாகத் திகழும் கொடி மலை தளத்திற்கு
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க பினாங்கு கொடிமலை வாரியத்திற்கு மாநில அரசு நிர்வாக நிதியுதவியாக ரிம11 மில்லியன் மதிப்பிலான மானியத்தையும் வழங்குவதாக கொன் யாவ் கூறினார்.

“2020 இல் பினாங்கு கொடி மலைக்கு மொத்தம் 780,106 சுற்றுப்பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.  இது முந்தைய ஆண்டில் 1.86 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது, (58.2% குறைந்துள்ளது). இந்த ஆண்டின் (2021) இன் இரண்டாவது காலாண்டில் 104,519 பேர்கள் மட்டுமே வருகையளித்துள்ளனர்.

2022 வரவு செலவுத் திட்டத்தில் நிர்வாக செலவினங்களுக்கு  ரிம935.22 மில்லியன் ஒதுக்கப்பட்ட வேளையில்   2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் ரிம25.4 மில்லியன் கூடுதலாக நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரிம25.4 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

‘பினாங்கு2030 இலக்கின் வெற்றியைத் துரிதப்படுத்தல்’ என்ற கருப்பொருள் கொண்ட வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் ரிம449.80 மில்லியன் நிதி பற்றாக்குறை ஏற்படும் வேளையில் ரிம485.42 மில்லியன் வருமானமாக மதிப்பிடப்படுவதாக, முதல்வர் தெரிவித்தார். 

“ பினாங்கு அரசு ஊழியர்களுக்கு அரை மாத போனஸ் அல்லது குறைந்தபட்சம் ரிம1,000 சிறப்பு நிதி உதவி கிடைக்கும். இந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் ரிம5.59 நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, என கூறினார்.  

“ கூடுதலாக, பினாங்கு அரசாங்கம் மேற்பார்வையாளர்கள் மற்றும் காஃபா ஆசிரியர்கள், மத பள்ளி ஆசிரியர்கள், தனியார் சீனப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தஃபிஸ் ஆசிரியர்கள், மற்றும் தாடிஸ் ஆசிரியர்கள் ஆகியோருக்கு நிதி உதவியாக ரிம940,600 ஒதுக்கியது,” என்றார். 

பினாங்கு மாநிலத்தின் 2022 ஆண்டின் வரவு செலவு  பின்வருவன அடங்கும்:

i) பொதுப் பணித் துறை: ரிம41.21 மில்லியன்

ii) பினாங்கு பயணப் படகு மற்றும் இலவச பேருந்து சேவை : ரிம10 மில்லியன்

iii)நம்பிக்கை கடனுதவித் திட்டம் : ரிம1 மில்லியன்

iv) i-sejahtera சமூகநலத் திட்டம் : ரிம50 மில்லியன்

v)கிராம சமூக மேலாண்மைக் கவுன்சில்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தல் (MPKK) = ரிம9 மில்லியன் 

Vi)விவசாயத் துறை வளர்ச்சி = ரிம6.25 மில்லியன்

Vii)விளையாட்டு மேம்பாடு = ரிம13.471 மில்லியன்

Viii) மாநிலத்தின் கால்நடைத் துறையை மேம்படுத்தல் = ரிம3.494 மில்லியன்  (கால்நடை சேவை துறை)