டத்தோஸ்ரீ ஆர் அருணாசலத்தின் சமூகச் சேவை தொடரட்டும் – பேராசிரியர்

rbt

இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தனர்.
  • பட்டர்வொர்த் – “39 ஆண்டுகளாகத் தொடர்ந்து தொண்டுள்ளம் கொண்ட டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் அவர்களின் நற்பணிக்குழுவினரும் பட்டர்வொர்த் சமூகநலத்துறையும் இணைந்து வசதி குறைந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பரிசுக்கூடை எடுத்து வழங்குவதை எண்ணி பெருமிதம் கொள்வதாக” மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

39-வது முறையாக நடத்தும் ‘தீபாவளி அன்பளிப்பு’ நிகழ்வை குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார் பேராசிரியர் ப.இராமசாமி. இந்நிகழ்வு ஶ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் நடைபெற்றது.

பரிசுக்கூடைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் பொது மக்கள்இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக நிதி அமைச்சர்  மேதகு லிம் குவான் எங் பிரதிநிதியாக தான் கொங் சொங், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  பீ புன் போ, ‘தி லைட் ல்’ தங்கும் விடுதி தலைமை நிர்வாக அதிகாரி தான் ஸ்ரீ ரமேஷ், ‘ஒன் ஓப்’ தொண்டு நிறுவன தலைவர் சுவா சூய் ஆவ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

டத்தோஶ்ரீ அருணாசலம் ஏற்று நடத்தும் இன வேற்றுமை பாராத இந்நிகழ்வில் ஏறக்குறைய 500 பல்லின வசதி குறைந்த மக்களுக்கு பரிசுக்கூடை வழங்கப்படுகின்றன. இதன் வழி பொருளாதார சிக்கல் எதிர்கோக்கும் பொது மக்கள் தீபத் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது என மேலும் விவரித்தார்.