சமூகநல இயக்கங்களின் நற்பணிகளுக்கு ஆதரவு – இராயர்

rpt
  • பொது மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர்

ஜெலுத்தோங் – “பல இன மக்கள் வாழும் இம்மலேசிய நாட்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீபாவளி பண்டிகை மட்டுமின்றி நோண்புப் பெருநாள் , சீனப்பெருநாள் ஆகிய அனைத்து பெருநாட்களையும் கொண்டாட வேண்டும்,” என தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர்.இசான் இளைஞர் சமூகநலச் இயக்கம் (Pertubuhan Kebajikan Ehsan Muda) ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 வசதி குறைந்த குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், சேலை, வேட்டி ஆகியவை வழங்கப்பட்டன.

 

இந்த இயக்கம் நமது நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து முக்கிய பண்டிகையின் போதும் பரிசுக்கூடை வழங்கி சிறப்பிப்பது பாராட்டக்குறியதாகும். மேலும், இந்த இயக்கத்தின் நற்பணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியுதவி வழங்கினார்.டு

அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும்தீபத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

2014-ஆம் ஆண்டு முகமது அஷ்ராப் தலைமையில் துவங்கப்பட்ட இச்சமூகநல இயக்கத்தில் 250 பல்லின மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றர். இந்த இயக்கம் பொது மக்கள் பிரச்சனைகள்  மற்றும் தேவைகளை மாநில அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் கருவியாகச் செயல்படுவதாக அதன் தலைவர் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.