7 இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவிப் பிரமானம்

2016-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவிப்பிரமானம் நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நகராண்மைக் கழக உறுப்பினர்கள் 1 ஜனவரி 2016 முதல் 31 டிசம்பர் 2016 வரை நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். பினாங்கு மாநிலத்தில் இயங்கும் இரண்டு நகராண்மைக் கழகத்திலும் முறையே 48 பேர் உறுப்பினர்களாகப் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர். ahli majlis 2016

திரு குமரேசன்
திரு குமரேசன்

2.. 3 4,,, 5
செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் கடந்த 8/1/2015-ஆம் நாள் அக்கழக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட 24 உறுப்பினர்களில் மூவர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் முறையே திரு மு.சத்திஸ், திரு டேவிட் மார்ஷல் மற்றும் திரு குமார். இந்தப் பதவிப்பிரமான நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் 7டத்தோ மைமுனா முகமது சாரிப் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு கையொப்பமிட்டனர்.
செபராங் பிறை நகராண்மைக் கழகம் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூடுதல் வருமானம் குறிப்பாக 2012-ஆம் ஆண்டு ரிம4.15 லட்சம், ரிம2.74லட்சம் (2013) மற்றும் ரிம0.17 லட்சம் பெற்று செபராங் பிறை வட்டாரத்தில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் வரையறுத்துள்ளனர் எனப் புகழ் மாலை சூட்டினார் மாநில முதல்வர். தூய்மைப்படுத்தும் பணிகள் தனியார்மயப்படுத்தப்பட்ட வேளையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கி செபராங் பிறை நகராண்மைக் கழகம் கைப்பற்றியதன் மூலம் 2,508 தொழிலாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் செலவினங்கள் கூடுதலாக அதிகரித்தாலும் மலேசிய6 .. குடிமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறினார் மாநில முதல்வர்.
பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் நிகழ்வு கடந்த 7/1/2015-ஆம் நாள் பாடாங் கோத்தா மாநகர் கழக அரங்கில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட 24 உறுப்பினர்களில் நால்வர் இந்தியர்கள் என்பது சாலச்சிறந்தது. அவர்கள் முறையே திரு ஆ.குமரேசன், திரு ஹர்விந்தர், திருமதி கலா மற்றும் திரு ஜோ.பிரான்சிஸ். இந்த பதவிப்பிரமான நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், பினாங்கு மாநகர் கழக தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு நியமனக் கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
பினாங்கு மாநகர் கழகம் பொது மக்களுக்குப் பல அடிப்படை பொது வசதிகள் மேம்படுத்தும் நோக்கத்தில் ரிம118.97 லட்சம் வழங்கி உணவகம், சந்தை, விற்பனை தளங்கள் கூடுதல் மேம்பாடு காணவிருக்கிறது எனத் தெரிவித்தார் முதல்வர். செபராங் பிறை நகராண்மைக் கழகம் மற்றும் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்களாகப் பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்ட இந்திய பிரதிநிதிகளை படத்தில் காணலாம்d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);