“ESTEEM” கல்வி மையம் திறப்பு விழாக் கண்டது.

கர்பால் சிங் கற்றல் மையத்தில் புதிதாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், ஆங்கிலம் மற்றும் கணிதம் கல்வி

படம் 1: கர்பால் சிங் கற்றல் மையத்தில் சிறுவர்களின் திறமையை பார்வையிட்டனர் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள்.
படம் 1: கர்பால் சிங் கற்றல் மையத்தில் சிறுவர்களின் திறமையை பார்வையிட்டனர் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள்.

மையம் (ESTEEM Teaching) திறப்பு விழாக்கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதனிடையே, இத்திட்டத்திற்காக மாநில அரசு 2.63 ஏக்கர் நிலத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். இசிஎம் லிப்ரா பவுன்டேசன் (ECM Libra Foundation) நிறுவனம் ரிம 4 லட்சத்தை வழங்கியது பாராட்டக்குறியதாகும். 14 மாத காலம் கட்டுமானப் பணிக்குப் பின் இம்மையம் திறப்பு விழாக்கண்டது.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் அவர்கள் இம்மையம் வளர்ந்து வரும் சிறுவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு அவர்களின் தனித்திறமைகளையும் புத்தாக்க திறன்களையும் அடையாளங்காண ஒரு உந்துசக்தியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், பினாங்கு மாநில அரசு காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் உலக சவால்களில் சிறந்து விளங்க பல முயற்சிகளை ஈடுபட்டு வருகிறது. பினாங்கு டேக்-டோம் (Penang Tech-Dome), பினாங்கு அறிவியல் மையம் (Penang Science Cluster), பினாங்கு அறிவியல் கஃபே(Penang Science Cafe) மற்றும் இப்பொழுது பினாங்கு கற்றல் மையம் போன்றவை இடம்பெறும்.

படம் 2: கர்பால் சிங் கற்றல் மையத்தில் தன் மகளை பதிவு செய்யும் பெற்றோர்.
படம் 2: கர்பால் சிங் கற்றல் மையத்தில் தன் மகளை பதிவு செய்யும் பெற்றோர்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், ஆங்கிலம் மற்றும் கணித கல்வி மையம் (ESTEEM Teaching) மூலம் அறிவார்ந்த தொழில் பயிற்றுநர்களை உருவாக்க முடியும். இது பினாங்கு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக அமையும்.}