பினாங்கு பத்து லஞ்சாங் மயானத்தில் கூடுதல் மின்சுடலை.

பத்து லஞ்சாங் மயானம்.
பத்து லஞ்சாங் மயானம்.

இந்து அறப்பணி வாரியம் நிலப் பிரச்சனை, சொத்துடைமை, கட்டடங்கள், வீடுகள், இடுகாடுகள், கோவில்கள் என அனைத்தையும் பராமரித்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை இந்திய மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் நிதி பிரச்சனைக்கு வழங்கப்படுகிறது. இந்த வாரியத்தின் மற்றொரு வெற்றியாக பத்து லஞ்சாங் மயானத்தில் இரண்டாவது மின்சுடலை ரிம500,000 செலவில் அண்மையில் பொருத்தப்பட்டது.

மின்சுடலை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி மின்சுடலை தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசினார். தற்போது பத்து லஞ்சாங் இந்து மயானத்தில் இரண்டு மின் இயந்திரங்கள் முறையான செயல்படுகின்றன. இந்த புதிய மின்சுடலை பொருத்த திறந்த குத்தகை முறையின் வழி மூன்று குத்தகையாளர்களிடமிருந்து விலைப்பட்டியல் பெறப்பட்டன. இதில் சி.எம்.தி.எஸ் தனியார் நிறுவனம் சிறந்த விலை மற்றும் அனுபவத்தின் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த மயானம் இலாபத்திற்காக நடத்தப்படவில்லை மாறாக இந்திய சமுதாயத்திற்கு வழங்கும் சேவை எனச் செய்தியளர் சந்திப்பில் தெளிவுப்படுத்தினார் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்.

இதனிடையே, இந்த மயானம் பராமரிப்பு பணிகள் 2 வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த மயானத்தை பொது மக்கள் சரியான முறையில் பயன்படுத்த நிர்வாகக் குழுவினரால் வலியூறுத்தப்படுகின்றனர். பத்து லஞ்சாங் இந்து மயானத்தில் பாராம்பரிய முறையான மரக்கட்டை சவ அடக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);