PTPTN கடனுதவி பெறுநரின் சம்பளத்தில் கட்டாயப் பிடித்தம் செய்வதற்குச் சட்டத்தில் இடமில்லை – குலசேகரன்

ozedf

 

ஜோர்ச்டவுன்- தேசிய உயர்கல்வி நிதிக் கூட்டுத்தாபனத்தில் (PTPTN) கல்வி கடனுதவிப் பெறுநரின் சம்பளத்திலிருந்து கட்டாயப்
பிடித்தம் செய்ய முடியாது என மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
நமது நாடு ரிம1 திரிலியன் கடன் பிரச்சனையை  எதிர்நோக்கினாலும்
புத்ராஜெயா, தொழிலாளர்களின் சம்பளத்தில்  பிடித்தம் செய்வதற்கு முன் தேசிய உயர்கல்வி நிதிக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.
“PTPTN விலக்குகளை அனுமதிக்கச் சட்டத்தை திருத்த வேண்டும், அந்நிலையில்
முதலாளிகள் சம்பளத்தை குறைக்க முடியும், என தொழில் சட்ட கலந்துரையாடலுக்குப்
பின் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு
தெரிவித்தார்.
இத்திட்டத்தை அமல்படுத்த முதலில் நாம் சட்டத்தை திருத்த வேண்டும், இருப்பினும் இச்சட்டத்தை திருத்தம் செய்வது பற்றி
நான் எதுவும் கூற முடியாது, ஏனெனில் அது எனது அமைச்சின் கீழ் இடம்பெறவில்லை என மேலுன் விவரித்தார்.
மலேசிய வர்த்தக சங்கத்  தலைவரான டத்தோ அப்துல் ஹாலிம் மான்சோர் வெளியிட்ட அறிக்கைக்கு குலசேகரன் இவ்வாறு பதில் அளித்தார்.  PTPTN அதன் கடன் பெறுநரிடம் அல்லது அவர்களது முதலாளிகளிடமிருந்து ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு சம்பளம் பிடித்தமும் செய்ய முடியாது.
நமது நாடு பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கும் வேளையில் நாம் அனைவரும் ஒன்றினைந்து பங்களிப்பை வழங்க வேண்டும்.
கடனுதவிப் பெற்ற மாணவர்கள் அதனை  செலுத்துவது அவசியம், என்றார்.