2008-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் அமர்ந்த பினாங்கு மக்கள் கூட்டணி அரசு மக்கள் நலன் பேணும் சிறந்த ஆட்சி முறையைக் கடைபிடித்து வந்தது என்பது வெள்ளிடைமலையாகும். மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் தலைமைத்துவத்தில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களால் பொருளாதார மாற்றம் கண்ட பினாங்கு மாநிலம் துரித வளர்ச்சியும் மேம்பாடும் கண்டு மலேசியாவில் குன்றின் மேலிட்ட விளக்காகத் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையாகாது. வசதி வாய்ப்பற்ற பொருளாதார...
திட்டங்கள்
பினாங்கில் உள்ள மிகப் பழமையான அரசாங்க அடுக்குமாடி வீடுகளில் ஒன்றான பாடாங் தெம்பாக்கில் அமைந்துள்ள ரைஃபில் ரேஞ் அடுக்குமாடி வீடுகளின் பாதுகாப்பை மேம்படுத்த சூழ்ந்துருக் காட்டிகள் ‘CCTV’ பொருத்தப்பட்டுள்ளன. இந்த குறைந்த விலை குடியிருப்புப் பகுதியில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்...
கடந்த டிசம்பர் 3-ஆம் திகதி தொடங்கப்பட்ட ‘BEST’ என்னும் இலவசப் பேருந்துச் சேவை அக்கரையில் வசிக்கும் பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு நன்மை பயத்துள்ளது. இது கொன்சொர்தியும் பேருந்து நிறுவனமும் பினாங்கு மாநில அரசும் இணைந்து வழங்கும் கூட்டுத் திட்டமாகும்....
இன்றைய நவீன உலகில் மனிதர்கள் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதிகமான வேலைப் பலுவைக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி அரசாங்கத் தொடர்பான வேலைகளை உடனடியாக செய்து முடிக்கும் வகையில் மாநில அரசு மின்...