தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக அகப்பக்கம் அறிமுகம்
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக (PWDC) ஏற்பாட்டில் அக்கழகத்தின் அகப்பக்கம் கடந்த 5.2.2013-ஆம் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. www.pwdc.org.my என்னும் இந்த அகப்பக்கத்தைப் பினாங்கு இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு லிடியா ஒங் கொக் பூய் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்தக் கழகத்தின் பெருந்திட்டமான ‘Budjet Responsive Gender’- யும் இந்த அகப்பக்கத்தின் மூலம் அல்லது அதன் நேரடி இணையத்தள...