ஆதரவற்ற இல்லங்களில் தீபாவளி ஒளி பிரகாசித்தது

whatsapp image 2025 10 05 at 12.20.06 pm

 

ஜார்ச்டவுன் – அண்மையில் புலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜோசுவா வூ ஸ்ஸே ஜெங் தலைமையில், ‘கோல்டன் ஹோம் கேர்’ முதியோர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டம், ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலித்தது.

ஜார்ஜ்டவுனில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம், அருகிலுள்ள மற்றொரு பராமரிப்பு மையமான பெதஸ்தா இல்லத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

 

whatsapp image 2025 10 05 at 2.30.49 pm (6)

‘கோல்டன் ஹோம் கேர்’ நிறுவனர்களான கே.சண்முகநாதன் மற்றும் எஸ். ஈஸ்வரி, பெதஸ்தா ஹோம் (1993ல் நிறுவப்பட்டது) நிறுவனரான டேனியலுடன் இணைந்து, சட்டமன்ற உறுப்பினர் ஜோசுவா வூ மற்றும் விருந்தினர்களை தீபாவளி விழாவில் அன்புடன் வரவேற்றனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் குத்து விளக்கேற்றுதல் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் இடன்பெற்றன. இக்கொண்டாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜேசுவா, தீபாவளிப் பரிசுக்கூடையை அன்புக்குரியவர்களுக்கு வழங்கினார்.

“தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,” என்று ஜோசுவா தனது உரையில் கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியின் போது, பினாங்கு மக்களுக்கு பயனளிக்கும் பல சமூகத் திட்டங்கள் மற்றும் நேர்மறையான மேம்பாட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அண்மைய ஆண்டுகளாக நமது நாடு எதிர்கொண்டு வரும் உலகளாவிய மற்றும் தேசிய பொருளாதார சவால்களையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் முன்முயற்சிகளையும் பாராட்டினார்.

“கடந்த மூன்று ஆண்டுகளில், நமது பொருளாதாரம் உலகளாவிய வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சவால்களை மலேசியா மட்டும் தனியாக எதிர்கொள்ளவில்லை,” என்று அவர் கூறினார்.

பினாங்கு மக்களுக்கு, குறிப்பாக சுகாதாரப் பராமரிப்புத் துறையில், ஜோசுவா மேலும் பல ஊக்கமளிக்கும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

செபராங் ஜெயா மருத்துவமனை வட மலேசியா இருதய சிகிச்சை மையமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். இது ஒரு முக்கிய மைல்கல்லாகும், இது பெருநிலத்தில் உள்ள நோயாளிகளுக்குப் பயனளிக்கும்.

“முன்னதாக, இருதய நோயாளிகள் அனைவரும் பினாங்கு மருத்துவமனைக்குச் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது, அவர்கள் செபராங் ஜெயா மருத்துவமனையிலேயே தேவையான சிகிச்சைகளை நேரடியாக பெற முடிகிறது,” என அவர் கூறினார்.

பினாங்கு மருத்துவமனையில் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். இதில் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் நெரிசலை நிவர்த்திச் செய்யவும் பல்நோக்கு வாகனம் நிறுத்துமிடம் மற்றும் 500 கூடுதல் படுக்கைகள் உட்பட மூன்று புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது.

“மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு நிதியளிக்கும் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு RM700 மில்லியன் ஆகும். இது பினாங்கு மக்களின் வாழ்க்கைமுறையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் மேலும் கூறினார்.