ஜார்ச்டவுன் – செபராங் பிறையில் ஒரு மறுவாழ்வு மையம் கட்டப்படும் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
மனிதவள அமைச்சின் (KESUMA) கீழ், சமூக பாதுகாப்பு நிறுவனம் (PERKESO) மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த புதிய திட்டம், தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கான மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மேற்கொள்ளும் ஒத்துழைப்பு மற்றும் தொடர் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
“சமூகப் பாதுகாப்பு உத்தரவாதங்களை எப்போதும் வழங்கும் ஆளுமை மற்றும் பங்களிப்பாளர்களாக செயல்படும் KESUMA (மனிதவள அமைச்சு) மற்றும் SOCSO (சமூகப் பாதுகாப்பு அமைப்பு) ஆகியவற்றிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
“2026 மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ உத்தாமா அன்வார் இப்ராஹிம் SOCSO திட்டத்தின் மூலம் செபராங் பிறையில் ஒரு மறுவாழ்வு மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்தார்.
“மேலும், பல ஆண்டுகளாக மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு பலனளித்ததாக அறியப்படுகிறது,” என்று பினாங்கு சீன வர்த்தக மன்றத்தில் (PCTH) நடைபெற்ற KESUMA SOCSO Lindung 2025 தீபாவளிக் கொண்டாட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக மலேசிய சுகாதார அமைச்சு (MOH), கோலாலம்பூரில் சேரஸ் மறுவாழ்வு மருத்துவமனையை (HRC) நிறுவியது. இது 2012 முதல் செயல்பட்டு வருகிறது என அறியப்படுகிறது.
கடந்த 2014 அக்டோபர்,1 அன்று, மத்திய அரசு மலாக்காவில் துன் அப்துல் ரசாக் SOCSO மறுவாழ்வு மையத்தை (PRPTAR) நிறுவியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பேராக்கின் ஈப்போ அருகே SOCSO நரம்பியல்-ரோபோட்டிக்ஸ் மற்றும் தேசிய சைபர்னிக்ஸ் மறுவாழ்வு மையத்தைக் கட்டுவதற்கான முயற்சிகளை KESUMA தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும் (ADUN) பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான கொன் இயோவ், தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்கின் அரசியல் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
அவரைப் பொறுத்தவரை, மலேசியா திறன் மையம் பெர்ஹாட் (டேலண்ட் கோர்ப்) மூலம் கேசுமாவை அணிதிரட்டி மலேசிய இந்தியச் சமூக திறன் முயற்சி 2.0 (MiSI 2.0) ஐ அறிமுகப்படுத்துவதில் ஸ்டீவனின் ‘குழு’ முயற்சிகள், குறிப்பாக வசதிக்குறைந்த பி40 குழுவிலிருந்து (B40) இந்தியச் சமூகத்திற்கு அதிக தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீ கியோங்கைத் தவிர, SOCSO வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால் அவர்களும் உரையாற்றினார்.
கேசுமா பொதுச்செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப்பும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
