திரு கர்பால் சிங் பிறந்தநாள் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது

"Little Sisters of the Poor" முதியோர்களுடன் இணைந்து அனிச்சல் வெட்டப்பட்டது.
“Little Sisters of the Poor” முதியோர்களுடன் இணைந்து அனிச்சல் வெட்டப்பட்டது.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனநாயக செயற்கட்சியின் மூத்த தலைவருமான மதிப்பிற்குரிய திரு கர்பால் சிங் அவர்களின் 75-வது பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் திரு கர்பால் சிங் அவர்களின் மூத்த மகனுமான திரு ஜெக்டிப் சிங் “Little Sisters of the Poor” எனும் முதியோர் இல்லத்தில் மதியம் உணவு வழங்கினார். திரு கர்பால் சிங் கடந்த காலங்களில் தமது பிறந்தநாளை இந்த முதியோர் இல்லத்தில் கொண்டாடுவது வழக்கம் என்றார் திரு ஜெக்டிப்.
குடும்ப சகிதமாக வருகையளித்த திரு.ஜெக்டிப் அன்னாரின் பிறந்தநாளை முன்னிட்டு அனிச்சல் வெட்டி முதியோர் அனைவருக்கும் வழங்கினார். மேலும் அனைத்து முதியோர்களுக்கும் தமது பொற்கரத்தால் சுவையான மதியம் உணவு வழங்கினார். அன்றைய தினம் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றது.

திரு ஜெக்டிப் குடுபத்துடன் இணைந்து முதியோருக்கு உணவு பரிமாறினர்
திரு ஜெக்டிப் குடுபத்துடன் இணைந்து முதியோருக்கு உணவு பரிமாறினர்

73 வயது நிரம்பிய முதியோர் பிலோமினா, தனது கணவர் திரு.கர்பாலிடம் வேலைச் செய்ததாகவும் அவரது குடும்ப உறுப்பினர்களை 20 வருடத்திற்கு மேல் நன்குத் தெரியும் எனவும் கூறினார். அன்னாரின் மறைவு தமக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகக் கூறினார்.
பொது மக்களின் நலனுக்காக நாடாளுமன்றம் வரை போரடிய திரு.கர்பால் மறைந்து 1 வருடமாகியும் மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);