லீகா சூப்பர் போட்டிக்கு முன்னேறுவதற்கு, பினாங்கு காற்பந்து சங்கத்திற்குக் கூடுதல் ரிம 2 மில்லியன்

ஜோய்ஸ் லீ சுவான் மாதிரி காசோலையை ஜெக்சன் தியகோ அவரிடம் வழங்கினார்.(உடன் மாநில் அரசியல் தலைவர்கள் மற்றும் காற்பந்து உயர் அதிகாரிகள்)
ஜோய்ஸ் லீ சுவான் மாதிரி காசோலையை ஜெக்சன் தியகோ அவரிடம் வழங்கினார்.(உடன் மாநில் அரசியல் தலைவர்கள் மற்றும் காற்பந்து உயர் அதிகாரிகள்)

பினாங்கு நீர் விநியோக நிறுவனம் பினாங்கு மாநில காற்பந்து சங்கத்திற்கு கூடுதல் ரிம2 மில்லியன் ஊக்கத்தொகை வழங்கியது. மாதிரி காசோலையை நீர் விநியோக நிறுவன உயர் அதிகாரி ஜோய்ஸ் லீ சுவான் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் முன்னிலையில் காற்பந்து பயிற்றுநரான ஜெக்சன் தியகோசங்க அவரிடம் எடுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக் அப்துல் காசிம் மற்றும் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் கலந்து கொண்டனர்.
நோன்பு மாதத்தில் வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை அர்த்தமுள்ளதாகத் திகழ்வதாக மாநில முதல்வர் கூறினார். மேலும், விளையாட்டாளர்கள் நோன்பு மாதத்தில் விளையாடுவது சவாலாக விளங்கினாலும், அதனைக் காரணம் காட்டாமல் அடுத்த பருவத்தில் நடைபெறும் லீகா சூப்பர் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றார்.
பினாங்கு காற்பந்து சங்கம் தொடந்து சிறப்பான ஆட்டங்களை வழங்கவும் தூண்டுகோலாகவும் அமையும் பொருட்டு இந்த பருவத்தில் மட்டுமே ரிம6 மில்லியன் ஊக்கத்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பருவத்தில் பினாங்கு காற்பந்து சங்கம் எஞ்சியுள்ள 12 ஆட்டங்களையும் முழு முயற்சியுடன் போராடி விளையாடும் என உறுதியளித்தார் சங்க தலைவர்.
காற்பந்து பயிற்றுநரான ஜெக்சன் தியகோ பயிற்சி முறைகளை துரிதப்படுத்தி பினாங்கு அணி அடுத்த வருடம் லீகா சூப்பர் முன்னேறிச் செல்ல அயராது உழைப்பேன் என்றார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);