பினாங்கு இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக காற்பந்து போட்டி விளையாட்டு 2015

மாநில இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களுக்கு நினைவுச்  சின்னம் எடுத்து வழங்கினார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு கிருபானந்தன். (உடன் பிரமுகர்கள்)
மாநில இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களுக்கு நினைவுச் சின்னம் எடுத்து வழங்கினார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு கிருபானந்தன். (உடன் பிரமுகர்கள்)

பினாங்கு மாநில இந்தியர்களின் பாரம்பரியத்தையும் வரலாற்று மாண்பினையும் பறைசாற்றும் தலமாக விளங்கும் பினாங்கு இந்தியர் சங்கம் 4-வது முறையாக காற்பந்து போட்டி விளையாட்டு கடந்த 27 ஜூன் 2015-ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போட்டி இந்தியர் சங்க திடலில் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுவதால் பொலோ திடலில் இனிதே நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
கடந்த காலங்களில் நாடு தழுவிய நிலையில் நடைபெற்ற இப்போட்டி முதல் முறையாக அனைத்துலக ரீதியில் நடைபெற்றது என்றார் போட்டியின் ஆசோசகரும் இந்தியர் சங்கத்தின் துணை தலைவருமான டாக்டர் கலைகுமார். இந்த ஆண்டு 24 காற்பந்து குழுக்கள் போட்டியில் பங்கெடுத்து சரித்திரம் படைத்ததது.
இந்த ஆண்டு சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசிய நாடுகளிலிருந்து மட்டுமே போட்டியில் கலந்து கொண்ட போதிலும் அடுத்த ஆண்டு இன்னும் கூடுதலான அனைத்துலக விளையாட்டாளர்கள் பங்கு கொள்வர் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திருகிருபானந்தன்.
அனைத்துலக காற்பந்து போட்டியில் இந்தியர் சங்க தலைவர் திருஆனந்த கிருஷ்ணன், பினாங்கு காற்பந்து சங்க தலைவர் டத்தோ கேரி நாயர், காற்பந்து குழுத் தலைவர் திரு வீரசிங்கம் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
காற்பந்து போட்டி விளையாட்டு வெத்ரன், மாஸ்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றன. இறுதிப்போட்டியில் வெத்ரன் பிரிவில் பினாங்கு இந்தியர் சங்கம் செரம்பான் இந்தியர் சங்கத்தை எதிர்த்து வெற்றி மகுடத்தைச் சூடினர். அதேவேளையில், மாஸ்டர் பிரிவில் சிங்கப்பூர் அணி 5 முறை தொடர்ந்து லிக் ஆட்டத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடியது. முதன்மை வெற்றிக் குழுவினருக்கு ரொக்கம் ரிம1,500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

வெற்றி மகுடம் சூடிய பினாங்கு இந்தியர் சங்க காற்பந்து குழுவினர்
வெற்றி மகுடம் சூடிய பினாங்கு இந்தியர் சங்க காற்பந்து குழுவினர்