ஆயிர் ஈத்தாம் – மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் சீராகவும் சரியான நேரத்திலும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு மத்திய அரசுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.

இன்று சன்ஷைன் சென்ட்ரலில்
பினாங்கு ஜனநாயக செயல் கட்சி (ஐ.செ.க) ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில்
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கலந்து கொண்டு பினாங்கு மக்களுக்கு தனது உறுதிப்பாட்டை உறுதியளித்தார்.
மத்திய அரசாங்கம் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் 13வது மலேசியா திட்டம் (13MP) 2026 இன் ரோலிங் பிளான் 1 (RP1) இன் கீழ் பினாங்கு மாநிலத்திற்கு பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுள்ளதற்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

இது மத்திய அரசாங்கம் பினாங்கு மாநில மேம்பாட்டுத் திட்டத்தின் மீது கொண்டுள்ள பரிவுமிக்க நேயத்தையும் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் காண்பிக்கிறது.

வருகின்ற நவம்பர்,4 அன்று நாடாளுமன்ற அமர்வுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டதுடன் இம்மாநிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களின் பட்டியல் குறித்து விரிவாக அறிவிக்கப்படும்.
“பினாங்கில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதை உறுதிசெய்வோம். இந்தத் திட்டங்கள் உடனடியாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தப்படும்.

பினாங்கு வாழ் மக்கள் பினாங்கு ஜனநாயக செயல் கட்சிக்கு (ஐ.செ.க) வழங்கிய அங்கீகாரத்திற்கு என்றும் தலை வணங்கி சிறந்த சேவை வழங்குவோம்.
பொது மக்கள் ஓர் ஆணையை வழங்குவதற்கு முன் எங்கள் செயல்திறனை நன்கு மதிப்பாய்வு செய்து மீண்டும் ஆட்சியமைக்க அங்கீகாரம் அளித்தனர். கடந்த தேர்தலில், பினாங்கு மாநிலத்தில் சில இடங்களை இழந்த போதிலும், மக்கள் அளித்த வலுவான ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பில்
தொடர்ந்து செயல்படுவோம்.
பினாங்கு மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வழங்கப்பட்ட ஆணையை சிறந்த முறையில் நிறைவேற்றப்படுகிறது. இது மக்களின் ஆதரவை மீண்டும் உறுதி செய்யும், என்றார்.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் டி.ஏ.பி. கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
வலிமையும் ஒற்றுமையும் கூட்டணியில் நிலைத்திருந்தால், தேசிய அளவில் ஒற்றுமை அரசாங்கத்தை அசைக்க எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தும் சவால்களை நாங்கள் எதிர்கொள்ள முடியும், என முதலமைச்சர் சாவ் தெரிவித்தார்.

இதற்கிடையில், மனிதவள அமைச்சரும் பினாங்கு மாநில டி.ஏ.பி தலைவருமான ஸ்டீவன் சிம், ஜூரு-சுங்கை டுவா உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை, பெர்தாம் விளையாட்டு வளாகம் மற்றும் மவுண்ட் எர்ஸ்கைன் சுரங்கப்பாதை மற்றும் இன்னும் சில அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
பினாங்கு டி.ஏ.பி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாட்டுக் குழுth தலைவரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்ப்பால் அவர்களும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் துணை நிதி அமைச்சர் லிம் யுய் யிங், கல்வி அமைச்சர் பத்லினா சிடேக், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோஸ்ரீ சுந்தராஜு, சாய்ரீல் கீட் ஜோஹாரி, லிம் சியூ கிம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.