ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப்பை பிரச்சாரத்தின் மூலம்  மாணவர்களிடையே விழிப்புணர்வு  – மேயர்

செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழக மேயர், டத்தோ ரோசாலி மொஹமட்
வளர்ந்த நாடுகளின்  மறுசுழற்சி விகித்துடன் (28%) ல்ல்ல்ல் ஒப்பிடுகையில் மலேசியா இன்னும் குறைவாகவே உள்ளது என்று கூறினார்.

இது சம்பந்தமாக, ஏப்ரல் 28 ஆம் தேதி எம்.பி.எஸ்.பி-இல் தொடங்கப்பட்ட இடைநிலைப்பள்ளி அளவிலான பிரச்சாரம் தொடர்பான குறும்பட காணொலி போட்டி, இளைய தலைமுறையினர் சமூகத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இது பற்றிய விழிப்புணர்வை வளர்க்கவும் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“உலகளாவிய இயற்கை நிதியம் (WWF) 2019 இல் நடத்திய ஆய்வில், மலேசியாவில்  ஓர் ஆண்டுக்கு தனிநபர் 16.78 கிலோகிராம் நெகிழிப்பை பயன்படுத்துகிறார். இது  சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்னாம் உள்ளிட்ட பிற நாடுகளின்  மொத்த கழிவுகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

“மலேசியா 1,300 நெகிழி உற்பத்தியாளர்கள் பட்டியலுடன், உலகின் மிகப்பெரிய நெகிழி உற்பத்தி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

“மலேசியாவில் மொத்த மறுசுழற்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது, இருப்பினும் மற்ற வளர்ந்த நாடுகளின் 28 சதவீதம் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. நம் நாட்டில் வரையறுக்கப்பட்ட மறுசுழற்சி செயல்முறை மற்றும் திறன் ஆகியவற்றால் இது சரிவுக் காண்கிறது,” என்று  எம்.பி.எஸ்.பி வளாகத்தில்  நடைபெற்ற 2021 இடைநிலைப்பள்ளிகள் இடையிலான ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப்பை காணொலி தயாரிக்கும் போட்டிக்கான பரிசு வழங்கும் விழாவில் மேயர் இவ்வாறு விளக்கமளித்தார்.

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு வழங்கும் விழாவில்  சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல ஆட்சிக்குழு உறுப்பினர், பீ பூன் போ; எம்.பி.எஸ் கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துறைகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மளிகைப் பைகள், கொள்கலன்கள், போத்தல்கள் மற்றும் பானம் வைக்கோல் போன்ற ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழி உற்பத்தி செய்யப்பட்ட அதே வருடத்தில் குப்பையிலே வீசப்படுகிறது என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அறிவிப்பை  ரோசாலி சுட்டிக்காட்டினார்.

“எனவே, நெகிழிப் பயன்பாடு தற்போது போல தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டுக்குள் பூமியில் 12,000 மில்லியன் டன் நெகிழிக்  கழிவுகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

2021 இடைநிலைப்பள்ளிகள் இடையிலான ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப்பை காணொலி தயாரிக்கும் போட்டியில்  முதல்நிலையில் செபராங் ஜெயா இடைநிலைப்பள்ளி; இரண்டாம் நிலையில் தெங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப்பள்ளி மற்றும் மூன்றாம் நிலையில்
பட்டர்வொர்த் சூங் லிங் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடினர்.