சமூகத்தில் தாய்ப்பால் பற்றிய அதிக விழிப்புணர்வு அவசியம்

Admin

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதன் நன்மை குறித்து  அறிந்திருப்பது அவசியம். இதன் மூலம்,  புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த  உணவை வழங்குவதை  உறுதி செய்ய முடியும்.

பினாங்கு சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங், குழந்தை பிறப்பதற்கு முன்பே, இது அவர்களின் வாழ்க்கைக்கு சிறந்த தொடக்கத்தைத் தரும், என கூறினார்.

“தாய்ப்பால் உயிரை காப்பாற்றவும்; குழந்தைகளின் ஆரோக்கியம், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என அறிவியலால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

“எனவே, தாய்ப்பால் குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் வழங்கப்படும் சிறந்த ஊட்டச்சத்துக்கான  ஆதாரமாகத் திகழ்கிறது.

“தாய்ப்பால் நடவடிக்கைக்கான உலக கூட்டமைப்பு (Waba) அறிவித்தது போல, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அதே வேளையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்து ஆதாரமாகவும் இது அமைகிறது.

“எனவே, பாலூட்டும் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம், வளர்ச்சி, நல்வாழ்வை உறுதி செய்கிறது,” என்று ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் தனது முகநூல் மூலம் ஜே.சி.ஐ பெர்ல் ஏற்பாட்டில் நடைபெற்ற இயங்கலை உலகத் தாய்ப்பால் வார (WBW 2021) நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

கே.சி.ஐ பெர்ல் தலைவர் அனிசியல் தே கூய் லுவான் மற்றும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுத் தலைவர் கோர் கர் டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகத் தாய்ப்பால் வாரம் என்பது உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் தாய்ப்பாலின் நன்மைகளை முன்னிலைப்படுத்தி அங்கீகரிக்கும் ஒரு வருடாந்திர கொண்டாட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரமாக அமைகிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது.

நாட்டில் தாய்ப்பால் விகிதத்தை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசாங்கம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள் இடையிலான கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என சோங் எங் வலியுறுத்தினார்.

“ஒவ்வொருவரின் தாய்ப்பால் பயணம் வித்தியாசமானது. சிலருக்கு அது இயல்பாக வரலாம், சிலருக்கு கடினமாகத் தோன்றலாம்; சிலர் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள் மற்றும் சிலர் குழந்தை பருவத்தை கடந்தும் கொடுக்கின்றனர்.

“கணவன், பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் முறையான பொது அறிவு மற்றும் ஆதரவுடன், தாய்ப்பால் கொடுப்பதில் வெற்றி அடைவது சாத்தியமாகும்.

“எனவே, தாய்ப்பால் கொடுப்பதை ஒரு விதிமுறையாகவும், அனைத்து பெற்றோர்களுக்கும் இது மிகவும் இயற்கையான தேர்வாகவும் ஊக்குவிக்க  விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

தே அவர்களின் கூற்றுப்படி, உலகத் தாய்ப்பால் வாரம்  தாய்ப்பால் கொடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், புதிய தாய்மார்கள் தங்களது பெற்றோர் என்ற பொறுப்பை  அறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்றார்.

“இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது, உடன் கொண்டு செல்வது மற்றும் உணவளிப்பது என குழந்தை பராமரிப்பு குறிப்புகளையும் தந்தை மற்றும் தாய்மார்களுக்கு வழங்குகிறோம்.