தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் 400 குடும்பங்களுக்குப் பரிசுக்கூடை

ஜார்ச்டவுன் – இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 400 வசதி குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பரிசுக்கூடையாக வழங்கப்பட்டது.

பாயா தெருபோங், ஆயர் ஈத்தாம் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த வசதி குறைந்த பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்ட பரிசுக்கூடைகள் வழங்கப்பட்டன.

பண்டிகை காலங்களில் வசதி குறைந்த பொது மக்களுக்கு அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு இப்பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சரும்
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்பால் தெரிவித்தார்.

“இந்த முன்முயற்சியின் மூலம் இன, மத வேறுபாடின்றி வசதி குறைந்த பொது மக்கள் அனைவரின் மீதும் எங்களின் அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

“இருளை நீக்கி ஒளித்தரும் தீபத் திருநாளை முன்னிட்டு வசதி குறைந்த பொது மக்களுக்கு உதவுவது மன நிறைவை அளிக்கும் சிறந்த செயலாகக் கருதப்படுகிறது,” என்று அவர் தாமான் தெருபோங் ஜெயாவில் தீபாவளியை முன்னிட்டு பரிசுக்கூடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ராம்கர்பால் இவ்வாறு உரையாற்றினார்.

பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய், இத்தொகுதி மக்களுக்கான இந்தப் பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சி அவர்களின் தீபத் திருநாளை மகிழ்ச்சியுடன் வரவேற்க துணைபுரிகிறது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“உண்மையில், கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தினால் மாநில சுற்றுலாத் துறை மிகவும் பாதுகாக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பினாங்கு மாநிலத்தின் சுற்றுலாத் துறை மேம்பாடுக் கண்டு வருகிறது. மேலும், சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

பினாங்கு மாநில அரசாங்கம் சுற்றுலாத் துறை மீண்டும் மீட்சிப் பெற பல ஆக்கப்பூர்வமானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஏனெனில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குச் சுற்றுலாத் துறை முக்கியப் பங்களிப்பு நல்குகிறது என்பது மறுப்பதற்மறுப்பதற்கில்லைகில்லை,” என
மாநில சுற்றுலா மற்றும் படைபாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினருமான வோங் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஆயர் ஈத்தாம்
சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் கோனி டான் மற்றும் ராம்கர்பாலின் தாயார் டத்தின்ஸ்ரீ உத்தாமா குர்மிட் கோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தாமான் தெருபோங் ஜெயாவில் நடைபெற்ற தீபாவளி விருந்தோம்பல் நிகழ்ச்சியில் பல்லின மக்கள் கலந்து கொண்டு இப்பண்டிகையை இன்முகத்துடன் வரவேற்றனர்.